32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

முதல் நீ முடிவும் நீ – இயக்குநராகும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

Dinesh R சேலம் Published: 07/01/2022 2 நிமிட வாசிப்பு Updated: 25/01/2022 Movie Posters
எழுத்து அளவு:

இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாகக் கொண்ட மென்மையான டிராமா திரைப்படமான “முதல் நீ முடிவும் நீ”-ஐ, இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கியுள்ளார். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியைப் பெறுவது பற்றியான கதைக்கருவில் இப்படம் உருவாகியுள்ளது. சென்னையில் 90’களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது. அந்த இளைய சமுதாய சிறுவர்களின் மனவெளியைப் பிரதிபலிப்பதுடன், அந்தக் காலத்தின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பின்னர் கதை வேறொரு இடத்திற்கு நகர்ந்து, வாழ்க்கையின் தேடல்களையும், நோக்கத்தையும் அடைவது குறித்தான மையக் கருப்பொருளைக் கொண்டுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நியூயார்க் திரைப்பட விருது விழாவில், ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் சிறப்பு மிகு கௌரவ விருதை (Honourable Mention) வென்றுள்ளது. மேலும், மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலிம் விருது விழாவினில் இத்திரைப்படம் ‘சிறந்த இயக்குநர்’ விருதினையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர, உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரை விழாக்களில் இப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் முக்கிய அம்சமாக இசை கருதப்படுகிறது. அந்த வகையில் இந்தப் படத்தின் இசைப் பாடல்கள், ஏற்கெனவே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, சித் ஸ்ரீராம் குரலில், பாடலாசிரியர் தாமரை எழுதிய இப்படத்தின் டைட்டில் பாடல், பல்வேறு வானொலி நிலையங்களின் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

“முதல் நீ முடிவும் நீ” திரைப்படத்தில், அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், K.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ் CSV, ஹரினி ரமேஷ், கிஷன் தாஸ் உட்பட இளம் நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

>> எழுத்து, இயக்கம் – தர்புகா சிவா
>>இசை – தர்புகா சிவா
>> ஒளிப்பதிவு – சுஜித் சாரங்
>> படத்தொகுப்பு – ஸ்ரீஜித் சாரங்
>> பாடல் – தாமரை, கீர்த்தி, கேபர் வாசுகி
>> இணை இயக்குநர் – ஆனந்த்
>> க்ரியேட்டிவ் ப்ரொட்யூசர் – ஆனந்த்
>> கலை – வாசுதேவன்
>> விளம்பரப் புகைப்படம் – G வெங்கட் ராம்
>> விளம்பர வடிவமைப்பு – கண்ணதாசன் DKD
>> ஒலி வடிவமைப்பு – ராஜகிருஷ்ணன் M.R
>> கலரீஸ்ட் – நவீன் சபாபதி

‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் இயக்குநராகத் தனது பயணத்தைத் துவங்கியுள்ளார் தர்புகா சிவா. சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்துள்ளார். இப்படம் ஜனவரி 21, 2022 அன்று ZEE 5 இல் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.