Shadow

Tag: Sivakarthikeyan Productions

கொட்டுக்காளி விமர்சனம்

கொட்டுக்காளி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கூழாங்கல் படத்தினை இயக்கிய P.S.வினோத்ராஜின் இரண்டாவது படம். முதற்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவா தயாரித்திருந்தனர்; இரண்டாவது படத்தை சிவகார்த்திகேயன் ப்ரொடகக்ஷன்ஸில் இயக்கியுள்ளார். வழக்கமான வணிக, மசாலா படங்களைத் தவிர்த்து பார்வையாளர்களின் சிந்தனையைக் கோரும் படங்களை எடுப்பதற்காகவே இயக்குநருக்கு பாராட்டுக்கள்.  கொட்டுக்காளி என்றால் அழுத்தமான பிடிவாதக்காரி எனப் பொருள் கொள்ளலாம். பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் மீனாவை சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர் மீனாவின் பெற்றோரும், பாண்டியின் குடும்பத்தினரும். மீனாவின் முறைமாமன் பாண்டி ஆவார். வீட்டிலிருந்து கிளம்பி சாமியாரின் இருப்பிடம் வரையிலான அவர்களது பயணமே இப்படம். ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், வினோத்ராஜின் படத்தில் ஒருநாள் நிகழும் சம்பவங்கள்தான் திரைக்கதையாக்கப்படுகிறது. அவரது முதற்படத்தைப் போலவே, இப்படமும் ஒரு பயணத்தை மை...
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யூ-ட்யூபில் பிரான்க் வீடியோ செய்யும் சிவாவிடமும் விக்கியிடமும், ஜிப்பா போட்ட ஒரு பணக்காரர் மூன்று டாஸ்குகளை முடித்தால், அவர்கள் எதிர்பார்க்கும் பணத்தைக் கொடுத்துக் கோடீஸ்வரர் ஆக்குகிறேன் என வாக்கு கொடுக்கிறார். அந்த மூன்று டாஸ்க்கள் என்ன, அதை எப்படி அவர்கள் முடிக்கின்றனரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை. 'ப்ளாக் ஷீப்' யூ-ட்யூப் சேனலில் இருந்து சினிமாவிற்கு வந்துள்ள படக்குழு. படத்திலும் அதன் தொடர்ச்சியாக, 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்ற யூ-ட்யூப் சேனல் நடத்துபவர்களாக பிரதான கதாபாத்திரம் இருவரையும் வடிவமைத்துள்ளனர். படத்தின் இடைவேளைக்கு முன்பு, ஓர் அமைச்சர் டாஸ்மாக் கடையை மூட உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு காட்சி வரும். அது வரை அமெச்சூர்களின் கன்னி முயற்சியில் வந்து சிக்கிக் கொண்டோம் என எரிச்சலுடன் நெளிய வைக்கிறார்கள். நகைச்சுவை என்ற பெயரில் அவர்கள் அடிக்கும் ஓபியையும், மொக்கையையும் மருந்துக்கு...
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – 90% நகைச்சுவை திரைப்படம்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – 90% நகைச்சுவை திரைப்படம்

சினிமா, திரைத் துளி
கனா படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. அந்தப் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, "நாங்கள் கதை, திரைக்கதை எழுதும்போதே குடும்ப ரசிகர்களுக்கான படமாக ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’வைக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். இப்போது, சென்சாரில் நல்ல ஒரு சாதகமான முடிவு கிடைத்திருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை எங்களுக்கு மேலும் வலுவாக்குகிறது. படம் 90% நகைச்சுவையையும், ரசிக்கக் கூடிய சுவாரசியமான தருணங்களையும் கொண்டிருக்கும். கூடவே நல்ல ஒரு மெஸ்சேஜுமுண்டு" என்றார். ஒட்டுமொத்த படக்குழுவுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றிக் கூறும்போது, "இது ஒரு அமைதியான மற்றும் அழகான அனுபவம், எல்லோரும் அதனை முழுமையாக அனுபவித்தோம். ரியோ ராஜின் அலட்டல் இல்லாத, மிகச் சிறப்பான நடிப்பு அவர் கதாபா...
சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் – தயாரிப்பு எண் 2

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் – தயாரிப்பு எண் 2

சினிமா, திரைத் துளி
முதல் படமான கனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தற்போது "தயாரிப்பு எண் 2" படத்தை மிக வேகமாக முடித்து வருகிறது. ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன.  படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, "இது வழக்கமான விஷயமாக தோன்றலாம். ஆனால் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவிப்பதைத் தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. வாய்ப்பு அளித்ததையும் தாண்டி, எங்களை ஊக்கப்படுத்தியதும், எங்கள் படைப்புச் சுதந்திரத்தில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல் முழுச் சுதந்திரம் கொடுத்ததால் எங்களுக்குப் படத்தை மிகச் சிறப்பாக கொண்டு செல்ல உற்சாகம் அளித்தது. இப்போது ...