32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி

Dinesh R சேலம் Published: 02/03/2018 2 நிமிட வாசிப்பு Updated: 05/06/2018 சமூகம்
எழுத்து அளவு:

Colors Super Kids - Mirchi Siva

சமீபத்தில் தமிழில் மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை ‘கலர்ஸ் தமிழ்’. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் ‘கலர்ஸ்’ தொலைக்காட்சி தனது மிக வித்தியாசமான மற்றும் தரமான நிகழ்ச்சிகளுக்குப் பெயர் போனது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் படிப்பைத் தாண்டி வியக்கத்தக்க திறமைகளைக் கொண்ட குழந்தைகளை மையமாக வைத்து ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ என்ற ஒரு ஷோவைத் தொடங்கியுள்ளனர்.

”தொலைக்காட்சியைக் கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும், இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தரவேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும் எங்களிடம் இருந்தது. படிப்பைத் தாண்டி பல விஷயங்களும் திறமைகளும் நிறைய உள்ளது என்ற எங்களது எண்ணம் பலரால் வரவேற்கப்பட்டுள்ளது. திறமைகளுக்குப் பஞ்சமே இல்லாத மண் நம்முடையது. நங்கள் தேடிக் கண்டுபிடித்து இந்த ஷோவிற்கு கொண்டு வரும் திறமையான குழந்தைகள் உலக அளவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறேன். குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பாதிக்கும் ‘மதிப்பெண் கொடுப்பது மற்றும் நீக்குதல்’ என்ற விஷயமே இந்த ஷோவில் கிடையாது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 9 மணி ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் ரசித்து மகிழ்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் ஷிவா தொகுத்து வழங்குவார். இந்த அபரிமிதமான திறமைகளைக் கொண்ட குழந்தைகளோடு கலகலப்பான உரையாடல்களை அவர் மேற்கொள்வர். அவர்களின் அழகான குழந்தைத்தன்மையை அவர் வெளி கொண்டு வருவார். இந்தக் குழந்தைகள் பார்ப்பவர்களை நிச்சயம் ஆச்சிரியப்பட வைப்பார்கள் என்பது உறுதி. இதைத் தவிர அதிரடி சிறப்பு விருந்தினர்கள், குழந்தைகளின் திறமைகளை அலச வல்லுநர்களின் கருத்து ஆகியவை இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாகும். அபாரமான திறமைகளைக் கண்டெடுத்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதற்காக எங்களது அணி முழு நேரம் உழைத்து வருகிறது”’ என ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ப்ளூ அய்ஸ் ப்ர்டொக்ஷன்ஸ் (Blue eyes productions) நிறுவனர் C.சுதாகர் கூறினார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.