32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

IAOH – OCCUCON 2025: தொழில்சார் ஆரோக்கியத்திற்கான ஒரு மைல்கல்

Dinesh R சேலம் Published: 30/01/2025 3 நிமிட வாசிப்பு Updated: 31/01/2025 இது புதிது
எழுத்து அளவு:

இந்தியத் தொழில்சார் சுகாதாரச் சங்கத்தின் (IAOH – Indian Association of Occupational Health) தமிழ்நாடு கிளையானது, தொழில்சார் ஆரோக்கியம் குறித்த 75 ஆவது தேசிய கருத்தரங்கு – OCCUCON 2025, ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1, 2025 வரை, சென்னையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஜி.ஆர்.டி. -இல் நிகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், IAOH இந்த தேசியக் கருத்தரங்கினை நடத்துகிறது. இக்கருத்தரங்கில், மருத்துவர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் மனிதவளப் பிரதிநிதிகள் என பலதரப்பட்ட நிபுணர்கள் கலந்து கொண்டு, பணியிடத்தில் முன்முயற்சிகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

IAOH, 1948 இல் நிறுவப்பட்டு, பல்வேறு தொழில்களில் உள்ள தொழிலாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் கவனம் செலுத்தும் ஒரு தேசிய அமைப்பாகச் செயல்படுகிறது. முதலில், தொழில்துறை மருத்துவ ஆய்வுக்கான சங்கம் (SSIM – Society for the Study of Industrial Medicine) என்று பெயரிடப்பட்டது. தற்போது, சுமார் 3,000 உறுப்பினர்களைக் கொண்டு நாடு முழுவதும் கிளைகளுடன் வளர்ந்துள்ளது. IAOH, தொழில்சார் ஆரோக்கியத்தில் முன்னணி உலகளாவிய அறிவியல் அமைப்பான, தொழில்சார் ஆரோக்கியத்திற்கான சர்வதேச ஆணையம் (ICOH – International Commission on Occupational Health), மற்றும் UK இல் உள்ள தொழில் மருத்துவ சங்கம் (SOM – Society of Occupational Medicine) ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. ஒரு வரலாற்று சாதனையாக, நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ICOH 2027 காங்கிரஸை இந்தியா நடத்தவுள்ளது, இது உலக அரங்கில் அதன் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தும்.

OCCUCONஇல், சர்வதேச பிரதிநிதிகள், ICOH பிரதிநிதிகள் மற்றும் வல்லுநர்கள் உட்பட 500 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கருத்தரங்கில், “தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு: நிறுவன நிலைத்தன்மைக்கான திறவுகோல் (Occupational Health & Wellbeing: A Key to Organizational Sustainability)” என்ற தலைப்பு விவாதிக்கப்படும். இக்கருத்தரங்கின் முக்கிய சிறப்பம்சங்களாக, பயிலரங்குகள், கல்வி அமர்வுகள், பணியிட ஆரோக்கியத்தின் சமீபத்திய போக்குகள் பற்றிய விவாதங்கள் ஆகியவை அடங்கும். ICOH மற்றும் SOM இன் தற்போதைய மற்றும் முன்னாள் அலுவலகப் பணியாளர்களின் பங்கேற்புடன் தொண்ணூறுக்கும் மேற்பட்ட அறிவியல் ஆவணங்கள் மற்றும் சுவரொட்டிகள் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளன.

இந்த வைர விழா ஆண்டில், தமிழ்நாடு கிளை, மதுரையில் தொடர்ச்சியான மருத்துவக் கல்வி (CME – Continuing Medical Education) நிகழ்ச்சிகளை நடத்தியது, இது, தென் தமிழகம் முழுவதும் உள்ள தொழில்சார் சுகாதார மருத்துவர்களை ஈர்த்து, IAOH க்குப் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு வித்திட்டுள்ளது. இதே போன்ற முயற்சிகளை மற்ற மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்ய தமிழ்நாட்டுக் கிளை திட்டமிட்டுள்ளது.

OCCUCON 2025, இந்தியாவில் தொழில்சார் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான IAOH இன் உறுதிப்பாட்டினை வலியுறுத்துகிறது. தொழில்சார் மற்றும் சுற்றுச்சூழல் மருத்துவத்தின் இந்தியப் பத்திரிகையின் (IJOEM – Indian Journal of Occupational & Environmental Medicine) ஜனவரி இதழ், கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் அதிகரித்து வரும் பணியாளர்களின் சிக்கல்களை சரிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அது தொடர்பான அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும், பாதுகாப்பான மற்றும் நிலையான பணியிடங்களை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளமாக OCCUCON 2025 செயல்படுகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.