Shadow

நம்மை நோக்கி வரும் பேராபத்து

Pacific Rim: Uprising in Tamil

2013 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பசிஃபிக் ரிம்’ என்கிற திரைப்படம் பற்றி நினைவிருக்கலாம். அதன் தொடர்ச்சியாக, ‘பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் (Pacific Rim: Uprising)’ எனும் படம் வருகிறது. ஸ்டீவென் டிநைட் என்பவர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

முதல் பாகத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில், கடல் பரப்பிலிரிந்து ராட்சச உருவில் முன் பின் கண்டிராத தோற்றத்தோடு சில உயிரினங்கள் மனிதக் குலத்தைத் தாக்க வர, மனித இனம ஒற்றுமையாக நின்று, அத்தாக்குதலுக்கு எதிர் தாக்குதலை நிகழ்த்தி, பேரழிவிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும்..

இந்த இரண்டாம் பாகத்தில் மீண்டுமொரு முறை அத்தகையதோர் அபாயம் தோன்றிட, மனித இனத்திற்கு மீண்டும் பேராபத்து எழுகிறது. ஜான் என்கிற ஒரு விமானியின் தந்தைதான் முன்னர், ஆபத்து ஏற்பட்ட சமயம், அனைவரையும் ஒன்று திரட்டி, எதிர் தாக்குதல் நிகழ்த்தி அபாயத்தை அகற்றியவர். வேறு பாதையில் பயணித்துவிட்ட ஜான், புதிதாய் ஒரு மிகப் பெரிய அபாயம் ஏற்படுவதை உணர்ந்து, தந்தையின் நற்பெயரை நிலைநாட்டும் வண்ணம், போராட்டக்களத்தில் குதிக்கிறார். விலகிச் சென்றுவிட்ட அவரது சகோதரி யுடன் இணைந்து செயல்பட யத்தனிக்கிறார் ஜான். மேலும் சிலரும் ஜானுடன் கைகோர்த்து நிற்க புதியதொரு படை உருவாகிப் புதியதொரு சரித்திரம் படைத்திடப் புயலெனப் புறப்படுகிறது.

முன்னர் வெளிவந்த முதல் பாகத்தில் இடம்பெற்ற அதிரடி ஆக்ஷன் காட்சிகளை விட மிகப் பிரம்மாண்டான விதத்தில் இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன!

ஆபத்து என்பது மனிதக் குலத்திற்கு எந்த ரூபத்திலும், எந்த விதத்திலும், எந்த வகையிலும் வந்திறங்க வாய்ப்புண்டு. நன்மையும் தீமையும் கலந்ததுதானே வாழ்க்கை என்பது! எனவே, அம்மாதிரியான தருணங்களில் மனித இனம், உணர்வுரீதியாக உண்டாகும் பிரச்சனைகளால் ஏற்படும் பிளவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல், ஒருங்கிணைந்து ஒன்று கூடி செயல்படும் பட்சத்தில், எத்தகைய சக்தி வாய்ந்த எதிரியையும் கூட எதிர்த்து நின்று வெற்றி கொள்ளலாம் என்பதே இத்தொடர் படங்களின் சாரம்சம்.

150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், மார்ச் 23 அன்று, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.