
Sci-Fi க்ரைம் த்ரில்லரில் கெளதம் கார்த்திக் | Verus Productions
கெளதம் ராம் கார்த்திக், வேரூஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷைக் முஜீப் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தத் திரைப்படம், “நாளைய இயக்குநர் சீசன் 1” மூலம் அறிமுகமான இயக்குநர் சூரியபிரதாப். எஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இவர், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியவராவார்.
இந்தப் பெயரிடப்படாத் திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் க்ரைம் த்ரில்லராக உருவாகவிருக்கிறது. இதில் கெளதம் ராம் கார்த்திக், ஒரு போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
வேரூஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், “நாங்கள் வேரூஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவத்தைத் தொடங்கிய முக்கிய நோக்கம், நம்முடைய ஆர்வத்தையும் அனுபவத்தையும் கொண்டு தரமான கற்பனைத்திறன் கொண்ட உள்ளடக்...