மெட்ராஸ் மேட்னி | ஃபர்ஸ்ட் லுக்
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் 'மெட்ராஸ் மேட்னி' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெட்ராஸ் மேட்னி' எனும் திரைப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கே.சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள...















