Shadow

யாத்ரீகா மியூசிக் வீடியோ – ப்ரோமோ

கூடைப்பந்து வீராங்கனையான வைஷாலி கெம்கர் தோன்றும் இந்த மியூசிக் வீடியோவை, நிகிதா கணேசன் இயக்குகிறார். காதல் பிரிவைத் தைரியமாக எதிர்கொள்ளும் பெண் பற்றிய வீடியோ அது. சிக்மகளூர் மலைப்பாதையில், ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ரைடர் ஓட்டிச் செல்கிறார். சோகமாகத் தொடங்கும் பாடல், பெண்ணின் தைரியத்தையும் நம்பிக்கையின் அளவையும் பறைசாற்றும் விதமாக வீடியோவை எடுத்துள்ளார் நிகிதா கணேசன்.

ஸ்ரீராம் ராகவன் ஒளிப்பதிவில், அல்-ருஃபீயான் இசையில், “யாத்ரீகா” வீடியோ உருவாகிறது. சியா ஸ்ரீ உடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த வீடியோ வெளியாகவுள்ளது.

தேசிய அளவு போட்டியாளரான வைஷாலி, கூடைப்பந்து விளையாட்டில் நிலவும் சகிக்க முடியாத பாலிடிக்ஸை (ஊழலால்) வெறுத்து, மாடலிங் பக்கம் தன் கவனத்தைத் திசை திருப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.