Search

புத்தம் புது காலை விடியாதா @ அமேசான் ப்ரைம் – ஜனவரி 14 முதல்

அமேசான் ப்ரைம் வீடியோவில், விரைவில் வெளிவரவுள்ள தமிழ் குறும்படங்கள் தொகுப்பான ‘புத்தம் புது காலை விடியாதா’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இப்படத்திலுள்ள ஒவ்வொரு கதையும் தனித்துவமானது, இருப்பினும் அவை அனைத்தும் தனிப்பட்ட முறையில் நம்பிக்கையைக் கண்டறிதல் மற்றும் மனித இணைப்பின் மூலம் புதிய தொடக்கங்களைப் பெறுவதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளன. இவை நம்பிக்கை, காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் பற்றி இரண்டாவது கோவிட்-19 லாக்டவுனைச் சுற்றி அமைக்கப்பட்ட கதைகள்.

ஐந்து அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொகுப்பு, பொங்கல் பண்டிகைக் காலமான ஜனவரி 14 ஆம் தேதி அன்று ப்ரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகவுள்ளது.

கதைகளில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி G கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் அந்தோணி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோரால் இயக்கப்பட்டுள்ளன.

ஐந்து அத்தியாயங்களின் தொகுப்பானது, தொற்றுநோயின் இரண்டாம் கட்டத்தில் தேசத்தை வாட்டி வதைத்த துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை, மனவுறுதி மற்றும் மனித உத்வேகம் ஆகியவற்றின் கதைகளை மையமாகக் கொண்டுள்ளது. ஐந்து வெவ்வேறு இயக்குனர்களால் இயக்கப்பட்ட ‘புத்தம் புது காலை விடியாதா’வின் ஒவ்வொரு கதையும் தனித்துவமான பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது லாக்டவுனில் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகள் மற்றும் சவால்களின் பொதுவான தன்மையால் ஒன்றாக இணைக்கப்பட்ட 5 தனித்துவமான அத்தியாயங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. முகக்கவச முத்தம், லோனர்ஸ், நிழல் தரும் இதம், தி மாஸ்க், மௌனமே பார்வையாய் ஆகியவை நெகிழ்ச்சியான பயணத்திற்குப் பார்வையாளர்களை இட்டுச் செல்லும்.

முகக்கவச முத்தத்தின் இயக்குநர் பாலாஜி மோகன், “முககவச முத்தம், தொற்றுநோயால் சிதைந்த காதல் மற்றும் ஏக்கம் ஆகிய இரண்டு அடிப்படை உணர்வுகளை ஒன்றாக இணைத்துள்ளது. கௌரி மற்றும் டீஜேயின் கதாபாத்திரங்கள் மூலம், கடினமான நேரங்களிலும் காதலுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம், நாம் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். இது உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் தொடர்புபடுத்தும் ஒரு கதை” என்று கூறினார்.

லோனர்ஸின் இயக்குண்ஹர் ஹலிதா ஷமீம், “தொற்றுநோய் மற்றும் லாக்டவுன் நம்மை மிகவும் எதிர்பாராத இடங்களில் தொடர்புகளையும் ஆதரவையும் கண்டுபிடிக்க எப்படித் தள்ளியது என்பதுதான் எனது கதை. குறிப்பாகத் தனியாக இருக்கும் போது திடமாக இருப்பது. லோனர்ஸ் இரண்டு அற்புதமான நடிகர்களான லிஜோமோல் ஜோஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரை ஒருங்கிணைத்து, பார்வையாளர்களின் இதயத்தைக் கவர்ந்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மௌனமே பார்வையாய் படத்தின் இயக்குநர் மதுமிதா, “இந்த இரண்டு வருட லாக்டவுன்கள் மற்றும் தனிமைப்படுத்தல்கள், உறவுகள் குறித்த நமது முன்னோக்கை மதிப்பிடச் செய்யவும், மறு மதிப்பீடு செய்யவும் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. நதியா மொய்து மற்றும் ஜோஜு ஜார்ஜ் இருவரும் தனியாக வாழும் நடுத்தர வயது தம்பதிகளுக்கு இடையேயான உறவு குறித்த எனது கண்ணோட்டத்தை இப்படம் வெளிப்படுத்துகிறது. குரலுக்குப் பின்னால் இருப்பவர்கள், வாழ்க்கையின் அன்றாடத் சிக்கல்கள் காரணமாக பின்னணியில் மங்கிப் போகின்றனர். இந்த உறுதியானது நிச்சயமற்ற எதிர்காலத்தால் எதிர்கொள்ளப்படும்போது நாம் என்ன செய்வது?” என்று கூறினார்.

நிழல் தரும் இதம் படத்தின் இயக்குநர் ரிச்சர்ட் ஆண்டனி, “ஐஸ்வர்யாவின் கதை, அவர் தன்னைக் கண்டறியும் ஒரு உள்நோக்கிய பயணத்தின்போது சந்திக்கும் உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டரின் ஏற்ற தாழ்வுகளைச் சமாளிக்கும்போதும் தொற்றுநோய் அவரது கதாபாத்திரத்திற்கு எத்தகைய பின்னணியை ஏற்படுத்துகின்றன என்பது குறித்ததாகும். இந்த பரபரப்பான காலங்கள் பலருக்கு மிகவும் கடினமாக இருந்தது. பார்வையாளர்கள் இப்படத்தோடு உணர்வுபூர்வமாக ஒன்றுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்

தி மாஸ்க் படத்தின் இயக்குநர் சூர்யா கிருஷ்ணா, “தி மாஸ்க்கில், தொற்றுநோய் நம்மை தனித்துவமான சூழ்நிலைகளில் தள்ளியுள்ளது என்பதையும், சில சமயங்களில், அது நேர்மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நமக்கு உதவியது என்பதையும் நான் எடுத்துக்காட்டியுள்ளேன், அல்லது அப்படித்தான் சூழ்நிலைக்கு மத்தியில் நம்பிக்கையை உருவாக்கிடும் வகையில் அதை வெளிப்படுத்த விரும்பினேன். சனந்த் மற்றும் திலீப்பின் கதாபாத்திரங்கள் ஒரு மாறுபட்ட சந்திப்பைக் கொண்டுள்ளன, இந்த கோவிட் நோயின் விளைவு மற்றும் அதன் மூலம் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் உணர்ச்சிகளை இது வெளிப்படுத்துகிறது” என்று கூறினார்.