32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ராஜாமகள் | தந்தை – மகள் பாசப்போராட்டம்

Dinesh R சேலம் Published: 02/07/2021 1 நிமிட வாசிப்பு Updated: 25/01/2022 சினிமா
எழுத்து அளவு:

க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரிப்பில், ஹென்றி இயக்கும் புதிய படம் ராஜாமகள். இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கன்னிமாடம் புகழ் வெலினா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் பக்ஸ், ஜீ தமிழ் புகழ் பேபி பிரிதிக்சா, குக்கூ புகழ் ஈஸ்வர், 100% காதல் புகழ் மாஸ்டர் ஜோஸ்வா, பிரமேலதா, பெராரே, திரைப்பட்டறை ராம், விஜய்பாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நிக்கிகண்ணன் ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார், பி.அஜித்குமார் படத்தொகுப்பில், மணி அமுதவன் பாடல் வரிகளில், சங்கர் ரங்கராஜன் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

“பிள்ளைங்க ஆசப்பட்டு கேட்குறப்ப நம்மளோட இயலாமையைக் காரணம் காட்டி முடியாதுன்னு சொல்லி வளர்த்தா, அதுக்கு பிறகு அவுங்க எதுக்கும் ஆசப்படவே தயங்குகிற ஒரு நிலை உருவாகிறது என்ற மிடில் கிளாஸ் தந்தையின் கருத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாகியிருக்கோம்” என்றார் இயக்குநர் ஹென்றி. அதே நேரம் அப்பாக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தையும் ஒருங்கே இணைத்து, அழகான கலகலப்பான படமாக உருவாக்கியுள்ளனர். தந்தையாக முருகதாஸும், மகளாக பிரதிக்ஷாவும் சிறப்பாக நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க சென்னை சுற்றுவட்டாரங்களிலும், மகாபலிபுரம், திருத்தணி போன்ற பகுதிகளிலும், இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், பாடல்கள் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.