32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பீர்க்கங்காய் பொரியல்

admin சேலம் Published: 28/10/2018 2 நிமிட வாசிப்பு Updated: 29/10/2018 சமையல்
எழுத்து அளவு:

வணக்கம் நண்பர்களே,

per

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

என்னதான் புதுப்புது காய்கறிகள் வந்தாலும், நம்ம நாட்டு காய்கறிகளுக்கு இருக்கும் மவுசும், அதனுடைய சுவையும் என்றைக்கும் மறக்காதுங்க. அதுவும், நம்ம பீர்க்கங்காய் பொரியல், செம்ம சுவையா இருக்குமே! கூடவே நம்ம நோய் எதிர்ப்த்பு திறனை அதிகரிக்குது; ரத்தத்தில் இருக்கும் சக்கரை அளவைக் குறைக்குது; அதனால சக்கரை நோயாளிங்க சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் கம்மியா இருக்குது. விட்டமின்- சி, நார்சத்து, இப்படி பலது இருக்குதுங்க. இவ்ளோ அருமையான காய்கறிய ஏன் விட்டு வைக்கனும்!?

தேவையான பொருட்கள்:

IMG_20181018_110241

  1. பீர்கங்காய் – 1 (பெரியது)
  2. பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கவும்) – 1
  3. வரமிளகாய் -3
  4. சாம்பார் தூள் -1 கரண்டி
  5. மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
  6. தேங்காய் – 1 மூடி (துறுவியது)
  7. கறிவேப்பிலை – கைப்பிடி
  8. உப்பு – தேவைக்கு
  9. எண்ணெய் – 1 கரண்டி

செய்முறை:

Step 1:

IMG_20181018_084126 IMG_20181018_084156

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுப் பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம், மிளகாய், மஞ்சள்தூள், கறிவேப்பிலை போட்டு வதக்குங்க.

 Step 2:

IMG_20181018_084246

வதங்கியதும், வெட்டி வச்சிருக்கும் பீர்க்கங்காயை போட்டு, ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி,  தேவையான அளவு உப்பு போட்டு வதக்குங்க.

Step 3:

IMG_20181018_085303

தண்ணீர் அதிகமா ஊத்தாம, சும்மா 1/2 கப் மட்டும் விட்டு வதக்குங்க. நல்லா வதங்கியதும், துருவிய தேங்காயைப் போட்டு, ஒரு 5 செகன்ட் பிரட்டி விட்டு, அடுப்பில் இருந்து எடுத்திருங்க.

IMG_20181018_110101

அவ்வளவுதான். சுவையான மிகவும் சத்தான பீர்க்கங்காய் பொரியல் தயார். தயிர்சாதத்துக்கு அருமையான காம்பினேஷன். சாப்பிட்டுப் பார்த்திட்டுச் சொல்லுங்க.

– வசந்தி ராஜசேகரன்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.