Shadow

கத்தரிக்காய் சாம்பார்

வணக்கம் நண்பர்களே,

IMG_20181018_110008

சாம்பார் இல்லாத நாட்களே இல்லைன்னு சொல்றளவுக்கு, நம்ம வாழ்கையில் பருப்பு சாம்பார் கலந்திருச்சுன்னே சொல்லலாம்ங்க. சாதம், இட்லி, தோசை, பொங்கல், பணியாரம், இப்படி அடுக்கிட்டே போகலாம். 🙂 இப்போ நாம பார்க்கிறது, சாதத்துக்கான சாம்பார். காய்கறிகள் எது வேணாலும் எவ்ளோ வேணாலும் போட்டுக்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. கத்தரிக்காய் -2
  2. வெண்டைக்காய் – 1
  3. துவரம் பருப்பு – 1 கப்
  4. வரமிளகாய் – 2
  5. தக்காளி – ½ (நறுக்கியது)
  6. சின்ன வெங்காயம் – ½ கப்
  7. மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
  8. சாம்பார் தூள் – 1 ஸ்பூன்
  9. புளி (ஊறவைத்து வடிகட்டவும்)- ½ எலுமிச்சை அளவு
  10. கறிவேப்பிலை- கைப்படி
  11. எண்ணெய் – 2 ஸ்பூன்
  12. உப்பு – தேவைக்கேற்ப

IMG_20181018_080447 IMG_20181018_110147  IMG_20181018_083027

செய்முறை:

Step 1:

IMG_20181018_080635   IMG_20181018_083533

1 கப் துவரம் பருப்பை, 3 கப் தண்ணீர், மஞ்சள் தூள், 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். விளக்கெண்ணெய் விட்டால், பருப்பு நன்கு மசிய வேகும்.

Step 2:

IMG_20181018_083521 IMG_20181018_083602 IMG_20181018_083628

பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, கடுகு போட்டு பொரிந்ததும், வெங்காயம், தக்காளி, கரிவேப்பிலை, மிளகாய், காய்கறி, உப்பு போட்டு வதக்கவும். பின்பு, சாம்பார் பொடி போட்டுப் பிரட்டி விட்டு, உடனே அடுப்பில் இருந்து எடுக்கவும்.

Step 3:

IMG_20181018_083817 IMG_20181018_083855 IMG_20181018_085309

வதக்கிய கலவையைக் குக்கரில் போட்டு, கூடவே புளி தண்ணீர் ஊற்றிப் பருப்புடன் கலக்கவும். அப்படியே, ஒரு 7-8 நிமிடம் நன்கு வேக விடவும்.

IMG_20181018_085312  IMG_20181018_110008

சுவையான சாம்பார் தயார். சாதத்துடன் சேர்ந்து பரிமாறிப் பார்த்துச் சொல்லவும்.

– வசந்தி ராஜசேகரன்