Shadow

தெவயம்/ திவயம்

வணக்கம் நண்பர்களே,

Thivayam 1

இன்னைக்கு நாம அரிசி வச்சு, ஒரு அருமையான, எளிமையான இனிப்பு செய்யறது எப்படின்னு பார்க்கலாம். இது கொங்கு மண்டலத்தோட ஒரு ஷ்பெசல் பலகாரம்னு சொல்லலாம். ஆனா, அந்தக் காலத்தில், அரிசியை, ஆட்டுகல்லில் நல்ல நைசா, கெட்டியா அரைச்சு, பிறகு வடசட்டியில் போட்டு, பருப்பு மத்தாலையும், கரண்டியாலயும் குத்தணும். மாவு உதிரியா வர வரை குத்தணும். இது ரொம்பக் கஷ்டம். இதுக்குப் பயந்தே, இப்போ பலபேர் செய்யறது இல்ல. ஆனா, இப்போ நான் சொல்லறது, மிக எளிமையான வழி. 🙂

தேவையான பொருள்கள்:

அரிசி -250 கிராம்

நெய் – 5 ஸ்பூன்

சக்கரை- 5 / 6 ஸ்பூன்

தண்ணீர் – 150 மிலி

Step 1:

IMG_20181013_170215

பாத்திரத்தில் அரிசியைப் போட்டு வறுக்கவும். பிறகு ஆறவிடவும்.

Step 2:

IMG_20181013_171722

வறுத்த அரிசியை, மிக்சியில் போட்டு மொரமொரப்பாக அரைத்து எடுக்கவும் (தண்ணீர் சேர்க்கக்கூடாது).

Step 3:

IMG_20181013_172350

இப்பொழுது தண்ணீர் சேர்த்த்து பிசைந்து, 5 நிமிடம் மூடி வைக்கவும்.

Step 4:

IMG_20181013_183122

அரிசி, தண்ணீரை உறிஞ்சி, மெதுமெது என்றிருக்கும். இப்போ அதை இட்லி சட்டியில் வைத்து அவித்து எடுக்கவும்.

Step 5:

IMG_20181013_184300

அவித்த மாவைப் பாத்திரத்தில் போட்டு, நெய் ஊற்றி, ஒரு 1 நிமிடம் வறுக்கவும். கமகம என்று மணக்கும். அடுப்பை நிறுத்தவும்.

Step 6:

IMG_20181013_184321

கொஞ்சம் ஆறியவுடன், சக்கரையைப் போட்டு (6 ஸ்பூன்)  கிளறி எடுத்து வைத்துப் பறிமாறவும்.

IMG_20181013_232008

அப்படியே சாப்பிடவும் நன்றாக இருக்கும். பழம் போட்டு பிசைந்து சாப்பிடச் செம்மையா இருக்கும்.

செய்து பார்த்திட்டு சொல்லுங்க! 🙂

– வசந்தி ராஜசேகரன்