Shadow

Tag: பாகுபலி

பாகுபலி – 1000 கோடி நாயகன்

பாகுபலி – 1000 கோடி நாயகன்

சினிமா, திரைச் செய்தி
பாகுபலி 2-இன் நட்சத்திர நாயகன் பிரபாஸ், வசூலில் ஆயிரம் கோடிகளைக் கடந்த முதல் இந்தியத் திரைப்பட நாயகன் என்ற பெருமையை ஈட்டியுள்ளார். திரையிட்டு பத்து நாட்களுக்குள் அந்த வசூல் சாதனையைப் படைத்திருப்பது ஒரு மாபெரும் சரித்திரமாகும். பாகுபலி 2 திரையிடப்பட்ட ஒன்பது நாட்களில் இந்தியாவில் ரூ. 800 கோடியையும், அயல் நாடுகளில் ரூ. 200 கோடியையும் வசூலித்து இச்சாதனையை படைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 121 கோடியில் துவங்கிப் பின், வெகு வேகமாய் தொடர்ச்சியாய் அடுத்தடுத்த நாட்களில் பல நூறு கோடிகளைக் கடந்து ஒன்பதாவது நாளில் ரூ. 1000 கோடியைத் தொட்டிருக்கிறது. இந்தக் காவிய படைப்பில், அமரேந்திர பாகுபலியாய்த் தன்னுடைய அசாத்தியமான, அப்பழுக்கற்ற நடிப்பை வெளிப்படுத்திய பிரபாஸ், உலகளாவிய அளவில் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, பாகுபலி 2 க்கு கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற்ற...
பாகுபலி 2 விமர்சனம்

பாகுபலி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகுபலி - தொடக்கம் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் எவ்வளவு உழைப்பினைச் செலுத்தியுள்ளனர் என்ற பிரமிப்பு, டைட்டில் கார்டிலிருந்தே தொடங்கி விடுகிறது. நல்ல திரையரங்கில் இப்படத்தினைப் பார்த்தால், அதன் பிரம்மாண்டத்தில் இருந்தும், விஷூவல் மேஜிக்கில் இருந்தும் மீளக் குறைந்தது ஓரிரு நாட்களாவது ஆகும். நேரடியாக ஃப்ளாஷ்-பேக்கிற்குள் நுழைந்து விடுகின்றனர். இயக்குநர் ராஜமெளலி சொன்னது போல், கதாபாத்திரங்களை முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளார். உண்மையில், கதை இந்த முடிவில் தான் தொடங்குகிறது. படத்தின் முதல் பாதி மிக அற்புதமானதொரு கலைப் படைப்பு. அமரேந்திர பாகுபலியின் அசத்தலான அறிமுகம், பிங்கலதேவனின் வில்லத்தனம், தேவசேனையின் அறிமுகம், கள்வர்களுடனான சண்டை, இயற்கைச் செறிவாய்ப் பூத்துக் குலுங்கும் குந்தல தேசம், தேவசேனை மீதான பாகுபலியின் காதல், கட்டப்பாவின் நகைச்சுவை, பல்வாழ்தேவனின்...
பாகுபலி விமர்சனம்

பாகுபலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
(பாகுபலி - தொடக்கம்) இந்தியாவின் மிக மிகப் பிரம்மாண்டமான படம். மிரட்டியுள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. பேரருவியின் அடிவாரத்தில் வளரும் ‘ஷிவு’-வுக்கு, மலை மீதேறிப் பார்க்க வேண்டுமென்ற தீராத ஆசை, மிகச் சிறிய வயது முதலே கனலாய் எழுகிறது. பலமுறை முயன்றும் மலையில் ஏற முடியாமல் வழுக்கி விழுந்து கொண்டேயிருக்கிறான். அருவியில் இருந்து விழும் மரத்தாலான முகமூடியின் சொந்தக்காரியை எப்படியும் காண வேண்டுமென்ற காதலின் உந்துதலில், ஒருநாள் மலையில் ஏறிவிடுகிறான். அங்கு யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கும் ஷிவு-வுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்விக்களுக்கான பதிலைச் சொல்கிறது பாகுபலியின் தொடக்கம். பாகுபலி என்றால் வலிமையான தோள்கள் உடையவன் எனப் பொருள். அந்தப் பெயருக்கு, ப்ரபாஸ் அநாயாசமாக நியாயம் செய்துள்ளார். இவர் மட்டுமல்ல, நடிகர்கள் அனைவருமே அவர்கள் ஏற்ற கதாப்பாத்திரங்களுக்கு கன கச்சிதமாகப் பொருந்துகின்றனர...