32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’

Dinesh R சேலம் Published: 30/11/2022 1 நிமிட வாசிப்பு Updated: 01/12/2022 சினிமா
எழுத்து அளவு:

இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை, நடிகரும், தமிழ்த் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவரை செய்திராத கெட்டப் சேஞ்சில் வெளியாகியுள்ள சசிகுமாரின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.