ஜூன் 22 ஆம் தேதி நடைபெற இருந்த பிரபல பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் அவர்களின் இசை நிகழ்ச்சி வானிலை காரணமாக ஜூலை மாதம் 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வானிலை மாற்றத்தால் கடந்த சில தினங்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால் இந்த மாற்றம் தவிர்க்க முடியாததாகியுள்ளது. தற்போது பெற்றுள்ள டிக்கெட் மறு திட்டமிடப்பட்ட தேதிக்குச் செல்லுபடி ஆகும்.
இசைக்கச்சேரிக்கு வரும் பார்வையாளர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம், உள்கட்ட அமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியாதது போன்ற காரணங்களாலும் இசைக் கச்சேரி நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இந்தக் கடினமான முடிவை எடுத்துள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ரசிகர்களிடையே குழப்பத்தையும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்வதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். Toyow Nee Singham Dhan Sid Sriram Live In Concert நடைபெற உள்ள புதிய தேதி ஜூலை மாதம் 20 ஆம் தேதி என்றும், ஃபீவர் மற்றும் சித்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (@feverfmofficial மற்றும் @sidsriram) பார்க்க மறக்காதீர்கள். அங்கு சித் உங்களுக்காக ஒரு சிறப்புச் செய்தியைக் கொடுத்துள்ளார். இசைக்கச்சேரி நடைபெறும் இடம் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை – 600003, இதற்கான டிக்கெட்டுகளை வைத்திருக்கும் ரசிகர்களுக்கு வாட்ஸ் அப்/ மின்னஞ்சல் மூலம் நேரடியாகக் கச்சேரி நடைபெற உள்ள இடம் நேரம் பற்றிய தகவல்கள் அனுப்பப்படும். மேலும் புதிதாக டிக்கெட் பெற விரும்புவர்கள் ஃபீவரின் அதிகாரப்பூர்வ Instagram-ஐப் பின் தொடரலாம்.