32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சிறகு – இசையோடு ஒரு பயணம்

Dinesh R சேலம் Published: 19/05/2019 2 நிமிட வாசிப்பு Updated: 19/06/2019 சினிமா
எழுத்து அளவு:

Siragu---Musical-Journey

உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம். சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது. எல்லோரும் இயந்திர கதியில் ஓடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது ‘சிறகு’.

மெட்ராஸ், கபாலி, வடசென்னை, சண்டைக்கோழி-2, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் மூலம் நன்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன்.

நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகிய இளம் அக்ஷிதா இப்படத்தின் நாயகியாகிறார்.

மருத்துவர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காளி வெங்கட் நட்புக்காக இணைந்துள்ளார் .

காட்சிகளை கண்களுக்குக் குளுமையாக ஒளிப்பதிவு செய்திருப்பவர் ராஜா பட்டாச்சார்ஜி .’பியார் பிரேமா காதல்’ படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனதை வருடும் பாடல், இதயத்தை நனைக்கும் பாடல், துள்ளலான பாடல் எனப் புகுந்து விளையாடியிருக்கிறார் அரோல் கரோலி. நேர்த்தியான படத்தொகுப்பைச் செய்திருப்பவர், அருண் குமார் வி .எஸ். திரைப்படத்துறையில் அனுபவம் மிக்க எக்சிகியூடிவ் புரொடியூசராக பல ஆண்டுகள் பணியாற்றிய மாலா மணியன் தனது FIRST COPY PRODUCTIONS (ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ்) சார்பாக ‘சிறகு’ படத்தைத் தயாரித்துள்ளார்.

கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி இப்படத்தை இயக்கியிருக்கிறார் .

நடிகர்கள்:

>> ஹரி கிருஷ்ணன்
>> அக்ஷிதா
>> மருத்துவர் வித்யா
>> நிவாஸ் ஆதித்தன்
>> காளி வெங்கட் (நட்புக்காக)

பணிக்குழு:

>> தயாரிப்பு நிறுவனம் – First Copy Productions
>> தயாரிப்பு – மாலா மணியன்
>> எழுத்து & இயக்கம் – குட்டி ரேவதி
>> ஒளிப்பதிவு – ராஜா பட்டச்சார்ஜி
>> இசை – அரோல் கரோலி
>> படத்தொகுப்பு – அருண் குமார் VS
>> பாடல்கள் – குட்டி ரேவதி , அறிவு
>> மக்கள் தொடர்பு – யுவராஜ்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.