‘பத்மஸ்ரீ’ விருது வாங்கிய ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் நைட் ஷ்யாமளனின் “ஸ்பிலிட்” திரைப்படம், ஃபிப்ரவரி 17 அன்று இந்தியாவில் வெளியாகிறது. அவரது படங்கள், வழக்கமான சினிமாவில் இருந்து விலகி சற்று வித்தியாசமான கதைக்கருக்களைக் கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கெவினுக்குள் மொத்தம் 23 ஆளுமைகள் (multiple personalities) இருக்கிறார்கள். அவர்களில் ஓர் ஆளுமையான டெனிஸ், மூன்று இளம்பெண்களைக் கடத்திவிடுகிறான். இளம்பெண்களை நிர்வாணமாக நடனமாட வைத்து குரூர மகிழ்ச்சி அடைபவன். கெவினின் மருத்துவர் கரென் ஃப்ளெட்சரும், கெவினின் உடலுக்குள் இருக்கும் சில ஆளுமைகளான 9 வயது சிறுவனான ஹெட்விக்கும், பெண்ணான பேட்ரிசியாவும் இளம்பெண்களுக்கு உதவ முற்படுகின்றனர். 23 போதாதென, கெவினுக்குள் அதி சக்தி வாய்ந்த “பீஸ்ட்” எனும் புதிய ஆளுமை எழுச்சி பெறுகிறது. மூன்று இளம்பெண்களும் நிலையென்ன என்பதுதான் படத்தின் கதை.
படம் நிச்சயம் பார்வையாளர்களுக்குப் புதியதொரு அனுபவத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை. ஹன்சா பிக்சர்ஸ் இப்படத்தை வெளியிடுகின்றனர்.