Shadow

Tag: Saayaa Tamil Movie

25 வகை திருஷ்டியும், தமிழகத்தை ஆண்டவர்களும்

25 வகை திருஷ்டியும், தமிழகத்தை ஆண்டவர்களும்

சினிமா, திரைத் துளி
சாயா படத்தில், நாயகி காயத்ரி ஒரே டேக்கில் நீண்ட பெரிய வசனத்தை படத்தில் இரண்டு இடத்தில் பேசி நடித்துள்ளார். ஒரு காட்சியில் நாயகன் வெளியூரிலிருந்து வருவார். அப்போது நாயகி அவரை வரவேற்று திருஷ்டி சுத்திப்போடுவார். கிட்டத்தட்ட இருபத்தைந்து வகையான திருஷ்டியை மூச்சுவிடாமல் ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார். இன்னொரு காட்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் பத்து முதல்வர்கள் பேர் சொல்ல வேண்டும் எனக் கேட்க, நாயகி காயத்ரி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை தமிழகத்தை ஆண்டது யார் யார் என மூச்சுவிடாமல் பேசி நடித்து யூனிட்டின் கைத்தட்டலை வாங்கியுள்ளார். நாயகி காயத்ரி கூறும்போது, நீ”ண்ட வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடிக்கவேண்டும் என்று இயக்குநர் பழனிவேல் கூறியபோது பயந்தேன். ஆனால் இயக்குநர் பழனிவேல் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். தமிழ் தெரிந்த நாயகி என்பதால் புரிந்து பேசி ஒரே...
ஓர் இயக்குநரின் ஆசையும் நம்பிக்கையும்

ஓர் இயக்குநரின் ஆசையும் நம்பிக்கையும்

சினிமா, திரைத் துளி
“பைரவா படத்துடன் 'சாயா' படத்தை வெளியிடலாமென்று முடிவெடுத்துக் களமிறங்கினோம். நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல். பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். அதற்கு எப்போ வழிபிறக்கும்னு தெரியலை. போதாக்குறைக்கு நம்ம வீட்டில் ஒரு இளைய தளபதி ரசிகர் இருக்கிறார். அவர், ‘எங்கள் தளபதி படம் வெளியாகும்போது நீங்கள் எப்படி வெளியிடலாம்?’ என ஒரே தகராறு. வீட்டிலேயே எதிர்ப்பிருந்தா எப்படி வெளியிடுறது? தள்ளிப்போட வேண்டியதாயிற்று. மறுபடியும் வெளியிட தேதி குறித்தபோது சல்லிக்கட்டு போராட்டம். ஒட்டுமொத்த நாடே களமிறங்கி நிற்கும்போது நான் எப்படிப் படத்தை வெளியிடுவேன்? தள்ளி வைத்தேன். இப்போதும் போகன் வருகிறது என்கிறார்கள். வரட்டும். ஆனால் இது சமூகத்திற்குச் சொல்லவேண்டிய கருத்துள்ள படம். மக்களுக்கான படம். தைரியமாக வெளியிடுகிறேன்” என்கிறார் இயக்குநர் வி.எஸ்.பழனிவேல்....
குழந்தைகளைப் பாதிக்கும் பாலியல் சீண்டல் – நமீதா

குழந்தைகளைப் பாதிக்கும் பாலியல் சீண்டல் – நமீதா

சினிமா, திரைத் துளி
சாயா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நமீதா, "இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச் சொல்லும் படம் என்று அறிந்ததில் மகிழ்ச்சி. சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன். இந்தப் படம் குழந்தைகள் பேரன்டிங் பற்றியும், கல்வி பற்றியும் எடுக்கப்பட்டுள்ளதெனத் தெரிகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம், நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன். எனக்கு அவங்கதான் குழந்தைகள். சாக்லேட், கேரமெல், லட்டு என்பது என்னுடைய பப்பீஸ்களின் பெயர். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக் கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்கிறேன். ஒரு விஷயம், ஆனால் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். ந...
ஒற்றுமை அவசியம் – நடிகர் ஸ்ரீகாந்த்

ஒற்றுமை அவசியம் – நடிகர் ஸ்ரீகாந்த்

சினிமா, திரைத் துளி
குழந்தைகள் தினத்தன்று ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார். ஜாக்குவார் தங்கமும், நடிகைகள் நமீதாவும் வசுந்தராவும் பெற்றுக் கொண்டனர். பாடல்களை வெளியிட்டு நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, ''எனக்கு சினிமாவில் ஒவ்வொரு விழா நடக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதில் கலந்து கொள்ள பிரபலங்களை அழைத்து வருவது பற்றிய எண்ணமும் வரும். இதுமாதிரி விழாக்களுக்கு அழைக்கும் போது பிரபலங்கள் யாரும் வர முன்வருவதில்லை. சாக்கு போக்கு சொல்லி பொய்யான காரணம் சொல்லித் தவிர்ப்பார்கள், வரமாட்டார்கள். இதை எண்ணி வேதனை அடைந்திருக்கிறேன். இதை நான் அனுபவத்திலும் கண்டிருக்கிறேன். விழா நடத்துபவர்கள் பலரது தவிப்பையும் உணர்ந்து இருக்கிறேன். அதன் வலிகளைப் புரிந்து பிறகு நான் ஒரு முடிவு செய்தேன். என்னை அழைப்பவர்களின் விழாவுக்குச் சென்று அவர்களை வாழ்த்துவது என்று முடிவு செய்தேன். நான்...
இதுவரை வந்திராத கதை – சாயா படம்

இதுவரை வந்திராத கதை – சாயா படம்

சினிமா, திரைச் செய்தி
“இதுவரை தமிழ்ப்படங்களில் சொல்லப்படாத வித்தியாசமான கதை” என்பதில் மிக உறுதியாக உள்ளார் சாயா படத்தின் இயக்குநர் வி.எஸ்.பழனிவேல். ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் மின்காந்த அலைகள் இருக்கும்; அதை ஆரா என்பார்கள்; ஆராவின் ஒளியைக் கொண்டே, உடலிலுள்ள நோயினை அறிய முடியுமெனப் படத்தைப் பற்றிக் கூறும் பொழுது இயம்பினார் இயக்குநர். இந்தப் படத்தின் நாயகன், மனிதர்களைச் சுற்றி இருக்கும் ஆராவைக் காணக் கூடிய சக்தி பெற்றவர் என படத்தின் ட்ரெயிலரில் இருந்து யூகிக்க முடிகிறது. நாயகன் இறந்தவர்களுக்கே உயிர் கொடுப்பது போல் முன்னோட்டத்தில் காட்சிகள் வருகிறது. மேலும், ''ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனது உடலைப் பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘சாயா’ படம் பதிலளிக்கும்'' என்றார் இயக்குநர். இந்தப் படம் அமானுஷ்யமான பேய்ப் படமென நினைத்துக் கொள்ள வேண்டாம்....
சாயா – படக்குழுவினர்

சாயா – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> சந்தோஷ் கண்ணா >> காயத்ரி >> சோனியா அகர்வால் >> Y.G.மகேந்திரன் >> பாய்ஸ் ராஜன் >> ஆர்.சுந்தர்ராஜன் >> பயில்வான் ரங்கநாதன் >> நெல்லை சிவா >> மனோகர் >> பாலா சிங் >> மூகாம்பிகை ரவி >> கராத்தேராஜா >> கொட்டாச்சிபணிக்குழு:>> தயாரிப்பு - V.S. சசிகலா பழனிவேல் >> கதை, இயக்கம், பாடல்கள், பின்னணி இசை - V.S. பழனிவேல் >> இசை - ஜான் பீட்டர் >> சண்டை - பவர் ஃபாஸ்ட் >> நடனம் - ரமேஷ் கமல் >> தயாரிப்பு மேற்பார்வை - மதுபாலன் >> மேலாளர் - ஆத்தூர் ஆறுமுகம் >> மக்கள் தொடர்பு - A. ஜான்...
கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சாயா படம்

கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சாயா படம்

சினிமா, திரைத் துளி
பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்தப் படம் பயமுறுத்துவது போல் தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்து உருவாகியுள்ளது 'சாயா'.  சாயா படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும். ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனது உடலைப் பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் ”சாயா” படம், ஒரு மாணவியின் ஆத்மா சம்பந்தப்பட்டது. ஆத்மா விட்ட சவாலை மாணவியின் ஆத்மா ஜெயித்துக் காட்டியதா? என்பதற்கான விடை படத்தில் இருக்கிறது என்கிறார் படத்தின் இயக்குநர் V.S. பழனிவேல். இவரே படத்தின் கதை, பாடல்கள், பின்னணி இசையையும் கவனித்திருக...