Shadow

Tag: Nayanthara

“ஜவான்” போஸ்டரில் மிரட்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா

“ஜவான்” போஸ்டரில் மிரட்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா

சினிமா, திரைச் செய்தி
 ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரி கான் தயாரிப்பில் “ஜவான்” திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. ’ஜவான்’  தமிழ், தெலுங்கு, இந்தி  ஆகிய  மொழிகளில்  செப்டம்பர்  7ஆம்  தேதியன்று  உலகம் முழுவதும்  திரையரங்குகளில்  வெளியாகிறது.செப்டம்டர் மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே படம் குறித்தான வேறு வேறு தகவல்களும், பாடல்களும்,  முன்னோட்ட வீடியோக்களும் வெளியாகி  உலகமெங்கும் இருக்கும் ஷாருக்கான் யூனிவர்ஸ் ரசிகர்களையும் பொதுமக்களையும்  படம் குறித்தான எதிர்பார்ப்புக்குள் விழ வைத்திருக்கிறது.’வந்த இடம்’ பாடல் வெளியாகி அதில் மீண்டும் இடம் பெற்ற லுங்கி தொடர்பான காட்சிகள் பெரும் பரப்புரையைப் பெற்றதோடு இசைப் பாடல்கள் வரிசையில்  ‘வந்த இடம்’ பாடல் முதல் இடத்தையும் பிடித்தது.. அதைத் தொடர்ந்து SRK...
கொலையுதிர் காலம் விமர்சனம்

கொலையுதிர் காலம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒருவழியாக எண்ணற்ற இடைஞ்சல்களைக் கடந்து படம் வெளியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாக எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டதோ அதே அளவு சிக்கல்கள் படத்தின் மேக்கிங்கிலும் உள்ளது. ஒரு ஹாலிவுட் படம் போல் ரம்மியமாக ஓப்பன் ஆகிறது. அரண்மனைக்கு நிகரான அழகான பெரிய மாளிகை, மிக அற்புதமான புல்வெளியும் உயரமான மதில் சுவர்கள், வெள்ளைக்கார வேலைக்காரப் பெண்மணி, ரசனையான ஒளிப்பதிவு என மிக அட்டகாசமாகப் படம் தொடங்குகிறது. பின் வாய்ஸ்-ஒவரில், நயன்தாரா யார், அவர் ஏன் இங்கிலாந்து வருகிறார் என வாய்ஸ்-ஓவரில் கதை சொல்கின்றனர். பின் அதே கதையை, விஷுவலாகவும் கூறியது கூறலாகச் சொல்லத் தொடங்குகிறார்கள். அதையும் கொட்டாவி வர வைக்குமளவு அசமந்தமான காட்சிகளால் காட்டுகின்றனர். சுஜாதாவின் நாவலான கொலையுதிர் காலத்திலிருந்து, இரண்டு சம்பவங்கள் மெலிதாக ஒத்துப் போகிறது. மரத்தின் பின்னால் தெரியும் ஓர் உருவமும், ஒரு பெண்ணின் பெயரில் சொத்து எழு...
ஐரா – இரட்டை வேடத்தில் நயன்

ஐரா – இரட்டை வேடத்தில் நயன்

சினிமா, திரைத் துளி
தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையைச் செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான "ஐரா" படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அறம் படத்தைத் தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன் கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்ய, அவள் படத்தின் கலை இயக்குநர் சிவசங்கர் அரங்கு அமைக்க, டி. ஏழுமலை நிர்வாக தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் பல...
கோலமாவு கோகிலா விமர்சனம்

கோலமாவு கோகிலா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோகிலாவின் அம்மா வடிவுக்கு நுரையீரல் புற்றுநோய் இரண்டாம் நிலையில் உள்ளது. தனது அம்மாவைக் குணபடுத்த 15 லட்சம் செலவாகும் என மருத்துவர் சொல்லிவிட, அப்பணத்திற்காகக் கோகிலா எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை. ஒப்புக்குச் சப்பாணியாகக் கூட ஒரு நாயகன் இல்லாத முழு நீள ஹீரோயின் ஓரியன்டட் படம். நயன்தாராவை நம்பி மட்டுமே இத்தகைய முயற்சி சாத்தியம். பாவாடை சட்டையில் அப்பாவியான முகத்துடன் படம் முழுவதும் நயன்தாரா மட்டுமே! இடைவேளைக் காட்சியில் நயன்தாரா காட்டும் மனப்பாங்கு (ஆட்டிட்யூட்) நகைச்சுவையாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அந்த வன்மம் மிகவும் அச்சுறுத்துகிறது. காதலில் விழுந்த சேகராக யோகி பாபு. எல்.கே எனும் லக்‌ஷ்மண குமாராக அன்புதாசன் நடித்துள்ளார். அவரது அறிமுகமே அட்டகாசம் எனினும் யோகி பாபுவுடனான அவரது காட்சிகளில் பார்வையாளர்கள் வெடித்துச் சிரிக்கிறார்கள். 'சாய்பாபா படத்தை 30 பேருக்கு ஷேர் பண்...
டோரா விமர்சனம்

டோரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கால் டேக்சி நிறுவனம் தொடங்குவதற்காக நயன்தாரா பழைய மாடல் கார் ஒன்றை வாங்குகிறார். அக்காரினுள் குடி கொண்டிருக்கும் டோரா எனும் நாயின் ஆவி சிலரைப் பழிவாங்குகிறது. அவர்கள் யார், அவர்களை நாய் ஏன் எப்படிப் பழிவாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை. பவளக்கொடியாக நயன்தாரா நடித்துள்ளார். தூங்கி எழுந்தாலும் சரி, கொலையைப் பார்த்து மிரண்டு ஓடி வந்தாலும் சரி, முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை, பளீச்சோ பளீச்சென இருக்கிறார். நாயகன் இல்லாததால் டூயட்டும் இல்லை ஆடைக்குறைப்பும் இல்லை. படத்தைச் சுமப்பது பளீச் நயன் மட்டுமே! நடிக்கக் கிடைத்த வாய்ப்பை மிக அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். நயன்தாராவின் தந்தையாகத் தம்பி ராமையா நடித்துள்ளார். கதைப்படி அவரது மனைவி ஓடி விட, நயன்தாராவிற்கு எல்லாமே தனது தந்தை தான். அவர்கள் இருவருக்கிடையில் இயல்பாய் இருக்க வேண்டிய பாசத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தத் தவறியுள்ள...