Shadow

Tag: அக்ஷயா ஹரிஹரன்

சபாநாயகன் விமர்சனம்

சபாநாயகன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காதலும் கடந்து போகும்; அது காலம் செல்ல செல்ல மறந்து போகும் என்கின்ற 2கே கிட்ஸ்கான டேக் இட் ஈஸி காதல் கதை தான் இந்த சபாநாயகன். அரவிந்த் என்று சொல்லப்படும் ச.பா.அரவிந்திற்கு பள்ளியில் ஒரு காதல், கல்லூரியில் டிகிரி முடிக்கும் போது ஒரு காதல், பின்னர் சிங்கப்பூரில் இருக்கும் அம்மா அப்பாவை பார்க்கச் சென்ற போது அங்கு ஒரு குட்டி காதல், மீண்டும் பள்ளிகால க்ரஷ் திரும்ப வாழ்க்கையில் வந்ததால் மீண்டும் அவளுடன் காதல், பிறகு எம்.பி.ஏ படிக்கும் போது மற்றுமொரு காதல் இப்படி பல்வேறு காதல்கள் அடங்கிய அரவிந்த்-தின் ஆட்டோகிராப் டைரியே இந்த சபாநாயகன். படம் எப்படியோ தொடங்கி, எப்படியோ நகர்ந்து எப்படியோ முடிந்து போகிறது.  பள்ளிகால காதலோ, கல்லூரி காலக் காதலோ, எம்.பி.ஏ கால காதலோ எதுவுமே மனதில் ஒட்டவில்லை. நாயக கதாபாத்திரமோ தன் காதல் மீதோ, தன் காதலி மீதோ எந்தவித பிடிப்பும் அழுத்தமும் தீவிரத்தன்மையும் இல்லாமல் இர...
ரங்கோலி – விமர்சனம்

ரங்கோலி – விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
புள்ளி வைத்து கோலம் போடுவது ஒரு அழகான கலை. கோலத்தின் முதல் புள்ளி எது..? முற்றுப்புள்ளி எது என்பதை எவராலும் கண்டறிய முடியாது. ஏனென்றால் கோலத்தினை நீங்கள் எங்கும் தொடங்கலாம், எங்கும் முடிக்கலாம்.  அதன் அழகியலே ஒரு புள்ளியில் தொடங்கி ஒவ்வொரு பக்கமும் அழகாய் விரிவது தான்.  ஆனால் இந்த வரையறை பெரும்பாலும் சினிமாவிற்கு ஒத்துவராது.  ஒரு புள்ளியில் தொடங்கி பல்வேறு பக்கங்களில் விரிவதற்கான அழகியல் அல்ல சினிமா.  அது பல்வேறு கதைகளாகத் துவங்கி ஒரு புள்ளியை நோக்கி குவிதற்கான அழகியல்.  ரங்கோலி திரைப்படம் தவறவிடுவது அதைத்தான். படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகளைப் பார்த்ததும், “DON’T JUDGE THE BOOK BY ITS COVER” என்ற சொல்லாடல் நினைவிற்கு வந்தது.  அடுத்து இன்னும் சில காட்சிகள் கடந்ததும், “SOMETIMES WE HAVE TO JUDGE THE BOOK BY IT’S COVER ITSELF” என்று எண்ண வைத்தது.  ஏனென்றால்  படம் துவங்கிய சில நிமிடங்கள...