Shadow

Tag: அதிதி ஷங்கர்

விருமன் விமர்சனம்

விருமன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஏழு வருடங்களிற்குப் பிறகு, கார்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ளார் இயக்குநர் முத்தையா. அடித்து வெளுக்கும் நாயகன், குலச்சாமியாக ஒரு பெண் கதாபாத்திரம், தறிகெட்டு திரியும் வில்லன் என்ற தனது டெம்ப்ளட்டிற்குள் விருமனையும் அடைத்துள்ளார். தனது தாயின் மரணத்திற்குத் தந்தை முனியாண்டி தான் காரணமென்ற எண்ணம், சிறுவன் விருமனின் மனதிலே ஆழமாகப் பதிகிறது. சாகும் முன், விருமனிடம், பணத்தை விட உறவுகள் புடை சூழ வாழ்வதே சிறந்தது என தந்தைக்கு உணர்த்தும்படி ஒரு வேண்டுகோளை வைக்கிறார் அவனது அம்மா முத்துலக்ஷ்மி. சுயநலத்தையும் அகங்காரத்தையும் ஆணவத்தையும் மொத்தமாகக் குத்தகை எடுத்திருக்கும் முனியாண்டியை விருமன் எப்படி தன் வழிக்குக் கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தின் அச்சாணி என்றால் முனியாண்டியாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ்தான். அவரது பாத்திர அமைப்பை இன்னும் ஸ்திரப்படுத்தியிருந்தால், தானாக விருமனுக...
மண் சார்ந்த படங்கள் – அப்போது பாரதிராஜா இப்போது முத்தையா | விருமன்

மண் சார்ந்த படங்கள் – அப்போது பாரதிராஜா இப்போது முத்தையா | விருமன்

சினிமா, திரைச் செய்தி
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’. இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் ராஜ்கிரண், “இந்தப் படம் மூலமாக 2-டி நிறுவனம் எனக்கு முதல் வாய்ப்பினைக் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜா அவர்களுக்கும் நன்றி. தம்பி முத்தையாவும், கார்த்தியும் கொம்பனில் முதல் வாய்ப்பு கொடுத்தார்கள். இரண்டாவது படமாக இந்த ‘விருமன்’ படத்திலும் கொடுத்ததற்கு நன்றி. 2டி நிறுவனம் படத்தயாரிப்பினை ஒரு கடமையாக செய்யாமல் அனைவரையும் தன் குடும்பத...