Shadow

Tag: அமானுஷ்யம்

6 அத்தியாயம் விமர்சனம்

6 அத்தியாயம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆறு இயக்குநர்களின் குறும்படங்களை தொகுத்து '6 அத்தியாயம்' என்று ஒரே படமாக இணைத்துள்ளனர். அமானுஷ்யம் தான் இந்த ஆறு படங்களையும் இணைக்கும் கண்ணி. பொதுவாக இப்படி இணைக்கப்படும் படங்கள், ஒரு குறும்படம் முடிந்த பின் இன்னொன்று எனத் தொடங்கும். ஆனால், எல்லாப் படத்தின் க்ளைமேக்ஸையும் கடைசி அரை மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டியுள்ளனர். இந்தப் பரீட்சார்த்த பாணி உலக அளவில் இதுவே முதல் முறை என்பது படத்தின் தலையாய சிறப்பு. 1. சூப்பர் ஹீரோ இயக்கம் - கேபிள் சங்கர் தன்னை சூப்பர் ஹீரோவாக ஒருவன் கருதுகிறான். அவனது வீட்டினரோ அவனுக்கு மனநலக் கோளாறு உள்ளதாக நினைக்கின்றனர். அதனால் அவனை மனநல மருத்துவரிடம் அழைத்து வந்து விடுகின்றனர். அவருக்கும் மனநல மருத்துவருக்கும் நடக்கும் உரையாடலே படத்தின் கதை. 2. இது தொடரும் இயக்கம் - சங்கர் தியாகராஜன் சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த ஒருவனைப் பேய்கள் எப்பட...
க்ரிம்ஸன் பீக் விமர்சனம்

க்ரிம்ஸன் பீக் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
க்ரிம்ஸன் பீக் என்றால் செவ்வண்ண முகடு எனச் சொல்லலாம். எடித் சிறுமியாக இருக்கும்பொழுதே, அவளது இறந்த தாயின் ஆவியால், ‘செவ்வண்ண முகடு’க்குப் போகாதே என எச்சரிக்கப்படுகிறாள். யுவதியாக வளர்ந்த பின்பாகவும், எடித்தை அவளது தாயின் ஆவி மீண்டுமொரு முறை எச்சரிக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக கல்யாணமாகிச் செல்லுமிடம் செவ்வண்ண முகடெனத் தெரியாமலேயே அங்குப் போய் விடுகிறார். பின் என்னானது என்பதே படத்தின் கதை. ‘அலேர்டல் ஹால்’ என்ற தனித்து நிற்கும் மாளிகையை, உள்ளூர் மக்கள் செவ்வண்ண முகடு என அழைக்கின்றனர். செம்மமண் நிறைந்த தரை மீது பனி பொழியும் கலவையான இடத்தில் அமைந்த மாளிகையை அவர்கள் அப்படி அழைக்கின்றனர். இந்த உண்மை எடித்துக்குத் தெரிய வரும் முன்பே, எல்லாம் கை மீறிப் போய்விடுகிறது. போதிய பணமின்றி செப்பனிடாத காரணத்தால், தாமஸ் ஷார்ப்பின் மாளிகையான க்ரிம்ஸன் பீக்கின் தோற்றமே அச்சுறுத்தும் விதமாய் விசித்திரமா...
கதவு தட்டப்பட்டது..!

கதவு தட்டப்பட்டது..!

நம்பினால் நம்புங்கள்
லில்லி ஆன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 'டொக்... டொக்...' கதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தாள். பெட்ரூம் லைட்டைப் போட்டாள். இரவு மணி 11:55. இரவு பணிக்குப் போன தன் கணவன் நிக்சன், ஏதாவது காரணமாக வீடு திரும்பி விட்டானா என்ற சிந்தனையுடன் நைட் கவுனைச் சரி செய்துகொண்டு பெட்ரூமை விட்டு ஹாலுக்கு வந்தாள். 'நிக்சன்' - என்று குரல் கொடுத்தாள். பதில் இல்லை. இரண்டு வினாடி நிசப்தம். பிறகு மீண்டும், 'டொக்... டொக்...' 'யாரது?' - உரக்கக் கேட்டாள். இப்போதும் பதில் இல்லை. சிறிது நேர அமைதிக்குப் பின், அதே சீரான இடைவெளியில், இரண்டு முறை மீண்டும் கதவு தட்டப்பட்டது. அந்த ஏரியாவில் இரவு நேரங்களில் அவ்வப்போது திருட்டு நடப்பதை லில்லி பேப்பர்களில் படித்திருக்கிறாள். அப்போது கதவைத் திறப்பது ஆபத்து என்று நினைத்த லில்லி, தன் கணவனுக்கு ஃபோன் செய்ய முடிவெடுத்தாள். ஹாலில் இருந்து போன் செய்ய பெட்ரூமுக்குத...