மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம்
மாஃபியா – குற்றத்தை நிறுவனமயப்படுத்தும் ஓர் இயக்கம் எனப் பொருள் கொள்ளலாம்.
அப்படி, போதைப் பொருள் கடத்துவதை நிறுவனமயப்படுத்தும் திவாகர் குமரனைப் பிடிக்க நினைக்கிறார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஆரியன். இதுதான் மாஃபியா படத்தின் கதை.
Ground to Earth பெர்ஸ்னாலிட்டியாக நடித்துள்ளார் பிரசன்னா. டிகே (DK) எனும் திவாகர் குமரன், பெரிய சிண்டிகேட்டின் லோக்கல் தலைவராக இருந்தும், யாரையாவது மிரட்ட, தானே நேரடியாகக் களம் இறங்குகிறார். அவரது அலட்டலில்லாத அமைதி ரசிக்க வைக்கிறது. காட்டில் தானொரு நரி எனச் சொல்லிக் கொள்ளும் அவர், அது போன்று குயுக்தியாக எதுவும் செய்வதில்லை.
நாயகனைக் காதலிக்கவும், ஸ்லோ-மோஷனில் நடக்கவும், ஆரியனின் குழு உறுப்பினர் சத்யாவாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இன்னொரு குழு உறுப்பினர் வருணாக பாலா ஹாசன் நடித்துள்ளார். வில்லனின் குடோனைத் தாக்கும் மிக முக்கிய பணியை இருவரும...