Shadow

Tag: இசையமைப்பாளர் தர்புகா சிவா

சரிகம ஒரிஜினல்ஸின் ‘டிக்கி டிக்கி டா’ சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு

சரிகம ஒரிஜினல்ஸின் ‘டிக்கி டிக்கி டா’ சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு

இசை விமர்சனம்
இசையுலகில் தனித்துவம் வாய்ந்த சுயாதீன பாடல்களை வெளியிட்டு வரும் முன்னணி ஆடியோ நிறுவனமான சரிகம.. அசல் பாடல்களையும், சுயாதீன இசை ஆல்பங்களின் வீடியோவையும் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது 'டிக்கி டிக்கி டா' எனும் பெயரில் சுயாதீன பாடல் ஒன்றையும், அதற்கான பிரத்யேக காணொளியையும் வெளியிட்டிருக்கிறது.இந்த பாடலுக்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். பாடலை மதன் கார்க்கி மற்றும் பாடலாசிரியரும், பாடகருமான அசல் கோளாறு ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். இந்தப் பாடலை அசல் கோளாறு, தர்புகா சிவா மற்றும் ஷிவாங்கி ஆகியோர் இணைந்து பாடி, ஆடி நடித்திருக்கிறார்கள். இந்த வீடியோ இசை ஆல்பத்தை மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளரும், பாடகருமான தர்புகா சிவா இயக்கியிருக்கிறார்.‌ இந்த பாடலை எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனமும், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து தய...
தேஜாவு இயக்குநருடன் இணையும் தர்புகா சிவா

தேஜாவு இயக்குநருடன் இணையும் தர்புகா சிவா

சினிமா, திரைத் துளி
தேஜாவு திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் திரைப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழும் ஆர்கா என்டெர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். அஸ்வின் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, படத்தொகுப்பாளராக அருள் சித்தார்த் ஆகியோர் ஒப்பந்தம் செயப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 'கிடாரி', 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'முதல் நீ முடிவும் நீ' ஆகிய படங்களில் தனது பாடல்கள் மூலம் முத்திரையைப் பதித்து இசை ரசிகர்களை தன் வசப்படுத்திய தர்புகா சிவா இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் பணியாற்றுவது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும், மேலும் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பக்கபலமாக அமையுமென்று தயாரிப்பாளர் புகழ் தெரிவித்துள்ளார். இப்ப...
முதல் நீ முடிவும் நீ – இயக்குநராகும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

முதல் நீ முடிவும் நீ – இயக்குநராகும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

Movie Posters, கேலரி, சினிமா, திரைச் செய்தி
இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாகக் கொண்ட மென்மையான டிராமா திரைப்படமான “முதல் நீ முடிவும் நீ”-ஐ, இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கியுள்ளார். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியைப் பெறுவது பற்றியான கதைக்கருவில் இப்படம் உருவாகியுள்ளது. சென்னையில் 90’களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது. அந்த இளைய சமுதாய சிறுவர்களின் மனவெளியைப் பிரதிபலிப்பதுடன், அந்தக் காலத்தின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பின்னர் கதை வேறொரு இடத்திற்கு நகர்ந்து, வாழ்க்கையின் தேடல்களையும், நோக்கத்தையும் அடைவது குறித்தான மையக் கருப்பொருளைக் கொண்டுள்ளது. நியூயார்க் திரைப்பட விருது விழாவில், ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் சிறப்பு மிகு கௌரவ விருதை (Honourable Mention) வென்றுள்ளது. மேலும், மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபி...
தரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்

தரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்

சினிமா, திரைத் துளி
தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் பெற்ற நடிகர் வசந்த் ரவி தனது அடுத்த படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார். RA Studios சார்பாக C.R.மனோஜ் குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில் இயக்குநர் தியாகராஜா குமார ராஜாவிடம் பணியாற்றிய அருண் மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இறுதிச்சுற்று படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான திரைக்கதை அமைத்து ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளுக்கும் ஒவ்வொரு வகையான சண்டை அமைப்பை உருவாக்கி, ஆக்ரோஷமான காட்சிகளாக வெளிவர தினேஷ் சுப்பராயன் புதிய யுக்தியை வடிவமைத்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் மிஷ...
கிடாரி விமர்சனம்

கிடாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாத்தூரின் சண்டியராய்த் தாட்டியம் செய்து ஊரையே மிரளச் செய்யும் கொம்பையா பாண்டியனின் கழுத்தில் எவனோ ஒருவன் கத்தியைப் பாய்ச்சி விடுகிறான். கொம்பையா பாண்டியன் வளர்த்து வைத்திருக்கும் பகைகளில் எது அச்சம்பவத்திற்குக் காரணமாய் அமைகிறது என்பதே படத்தின் கதை. மதயானைக் கூட்டம் படத்தில் மிரட்டியிருந்த எழுத்தாளர் வேல ராமமூர்த்தியை, மீண்டும் அதே போலொரு பாத்திரத்தில் கச்சிதமாக உபயோகித்துள்ளார் இயக்குநர் பிரசாத் முருகேசன். வழக்கம் போல் கம்பீரமாக வலம் வருவதுதான், கொம்பையா பாண்டியன் பாத்திரத்தில் எழுத்தாளருக்கு வாய்த்தது எனச் சலிப்பில் இருக்கும் பொழுது, படத்தின் இறுதியில் விஸ்வரூபம் எடுக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் உண்மையான சொரூபம் தெரிய வரும் போதுதான் படம் தன் உச்சத்தை அடைகிறது. கொம்பையா பாண்டியின் மகன் உடைய நம்பியாக நடித்திருக்கும் கவிஞர் வசுமித்ரவும் தன் நடிப்பால் கவனிக்க வைக்கிறார். அவர் முகத்த...