Shadow

Tag: இயக்குநர் ஆர்.கே.செல்வமணி

சத்யராஜ், அஜ்மல் நடிக்கும் ‘தீர்க்கதரிசி’

சத்யராஜ், அஜ்மல் நடிக்கும் ‘தீர்க்கதரிசி’

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீ சரவணா ஃபிலிம்ஸ் சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இந்தப் படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது. சத்யராஜ் சாரின் அருமையான நடிப்பு இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தப்படம் பெரும் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்விழாவினில் பேசிய இயக்குநர் பேரரசு, “ஒரு நேர்த்திய...
“நெகடிவ் ரோல்களில் பிரஷாந்த் நடிக்கவேண்டும்” – ஆர்.கே.செல்வமணி

“நெகடிவ் ரோல்களில் பிரஷாந்த் நடிக்கவேண்டும்” – ஆர்.கே.செல்வமணி

சினிமா, திரைச் செய்தி
ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம். இந்த ஆண்டு சென்னை தி.நகர் பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த விழாவில் ஃபெப்ஸியின் தலைவரும், அண்மையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றவருமான இயக்குநர் ஆர். கே. செல்வமணி, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தினா ஆகியோர் கலந்து கொண்டு பிரஷாந்தை வாழ்த்தினர். இவ்விழாவில் பிரஷாந்தின் தந்தையும் இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் பேசும்போது, “பிரஷாந்த் நடித்து அடுத்தடுத்து படங்கள் வர உள்ளன. இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் 'அந்தகன்' திரைப்படம் பிரஷாந்த்துக்கு மறக்க முடியாத படமாக இருக்கும். இந்தப் படம் ஹிந்தியில் வெளியாகிப் பெரிய வெற்...
இயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை

இயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை

சினிமா, திரைச் செய்தி
வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் 'எவனும் புத்தனில்லை'. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னை கமலா திரையரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. "எவனும் புத்தனாக முடியாது. ஆனால் எல்லாரும் மனுசனாக முடியாது. இங்கு சிறிய படம் பெரிய படம் என்றில்லை. எல்லோரும் ஒரே போல் தான் உழைக்கிறோம். ஆனால் எல்லாப்படங்களுக்கும் தியேட்டர் கிடைக்குதா என்றால் இல்லை. மற்ற மாநிலங்களில் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நம் இண்டஸ்ட்ரி மிகவும் சிக்கலாக இருக்கிறது" என்றார் இயக்குநர் மீரா கதிரவன். இசையமைப்பாளர் மரியா மனோகர், " 'எவனும் புத்தனில்லை' என்ற தலைப்பே எல்லோரையும் ஈர்க்கக்கூடியது. எல்லோருமே அயோக்கியர்கள் தான். ஏன்னா எல்லோராலும் நல்லவனா இருக்க முடியாது. காலத்தின் கட்டாயத்தால் தான் அப்படி மாறுகிறோம். அதனாலே எவனும் புத்தனில்லை என்ற டைட்டில் மிகவும் பிடித்தத...