அன்பிற்கினியாள் விமர்சனம்
எத்தனை வசீகரமான தலைப்பு? படமும் அப்படியே!
மலையாளத்தில் அன்னா பென் நடித்த ‘ஹெலன்’ எனும் வெற்றிப்படத்தைத் தன் மகள் கீர்த்தி பாண்டியனுக்காகத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் அருண்பாண்டியன். மகள் மீது பாசம் கொண்ட அன்பிற்கினியானான அருண் பாண்டியன், படத்திலும் கீர்த்திக்குத் தந்தையாக நடித்துள்ளார்.
சிக்கன் ஹப் எனும் கடையில் பணி புரியும் அன்பிற்கினியாள், ஓர் இரவு அக்கடையின் ஃப்ரீஸர் அறையில் சிக்கிக் கொள்கிறார். -15 டிகிரிக்குக் கீழ் செல்லும் அந்த ஃப்ரீஸர் அறையில் இருந்து எவ்வாறு மீண்டார் என்பதுதான் படத்தின் கதை. ஆனால், படத்தின் கிளைக் கதைகளான தந்தை – மகள் உறவு; கடனிலுள்ள அன்பிற்கினியாளுக்கும், வாழ்க்கையைச் சீரியசாகப் பாவிக்காத சார்லஸ் செபஸ்டியனுக்கும் உள்ள காதல்; அனைவர் மீதும் எரிந்து விழும் சிக்கன் ஹப்பின் மேனஜர்; அலட்சியமே உருவான போலீஸ் அதிகாரி; சிறையிலிருக்கும் மனிதாபிமானமுள்ள கைதி; சிரித்த முகமா...