Shadow

Tag: இயக்குநர் ஜெயபிரகாஷ்

காதல் என்பது பொதுவுடைமை விமர்சனம்

காதல் என்பது பொதுவுடைமை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சமூகம் பேசத் தயங்கும், பேசினாலும் அருவருப்பாக அதை அணுகும் விஷயத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது படம். சாமுக்கும் நந்தினிக்குமான காதலை, சாமின் தாயிடம் சொல்வதுதான் படம். சாமாக லிஜோமோலும், நந்தினியாக அனுஷா பிரபுவும் நடித்துள்ளனர். மகளின் காதலனை வரவேற்கும் ஆர்வம் கலந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் லக்ஷ்மி. லக்ஷ்மியாக ரோகிணி நடித்துள்ளார். லெஸ்பியன் இணைகளுக்கு ஆதரவாக இருக்கத் துணைக்கு வரும் ரவீந்திராவை மாப்பிள்ளையாக நினைத்துக் கொள்கிறார் ரோகிணி. ரவீந்திரவாக நடித்துள்ள கலேஷ், சங்கடத்துடன் அந்தச் சூழலை அணுகுவது ரசிக்க வைக்கிறது. அந்தச் சூழலின் பதைபதைப்பைப் பாத்திரங்கள் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். இப்படியாகப் படத்தின் முதற்பாதி சட்டெனக் கடந்துவிடுகிறது. படத்தின் இரண்டாம் பாதியில், பிரதான கதாபாத்திரங்கள், ஓரினசேர்க்கையை எதிர்த்தும் ஆதரித்தும் பேசியவண்ணம் உள்ளனர். ஒரு வீட்டுக்குள்ளேயே, கதாபாத்திரங்...
“சக மனிதரை நேசி” – நெல்சன் வெங்கடேசன் | காதல் என்பது பொதுவுடமை

“சக மனிதரை நேசி” – நெல்சன் வெங்கடேசன் | காதல் என்பது பொதுவுடமை

சினிமா, திரைச் செய்தி
காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலேஷ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், படத்தொகுப்பாளர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்தப் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் ‘பூ’ சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் ஜெயபிரகாஷ், "லென்ஸ் முடிச்சுட்டு அடுத்து என்னென்னு தெரியாம இருந்தது. ஒரு நண்பரைப் பார்க்க பெங்களூரு போயிருந்தேன். பீர் நல்லா இருக்கும் ஒரு பாரில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். கன்னடத்தில் படம் எடுத்தா, 17 லட்சம் வரை மானியம் கிடைக்கும்ன்னு சொன்னார். மறுபடியும் சின்ன பட்ஜெட்டில் ஒரு படமா என யோசித்துக் கொண்டே, ஒரு டிஷ்யூ பேப்பரில் கிறுக்கின கதைதான் இது. சென்னை வந்து கோ...