Shadow

Tag: இயக்குநர் மணிகண்டன்

கடைசி விவசாயி விமர்சனம்

கடைசி விவசாயி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேச்சிலும் எழுத்திலும் முதல் இடத்தில் வைக்கப்படும் விவசாயிகள், அவர்களுக்கான தேவைகளின் போது கடைசி இடத்திலே வைக்கப்படுகிறார்கள். "உழவன் தான் உலகின் வேர்" என்று கவித்துவமாகச் சொன்னாலும் அவர்களின் பாடுகள் அப்படி இல்லை. கடைசி விவசாயி படத்தில் விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பிரச்சாரம் செய்ய வாய்ப்பிருந்தும், அதை மிக நுணுக்கமாகத் தவிர்த்து ஒரு 83 வயது விவசாயினுடைய வாழ்வைக் கண்முன்னே நிறுத்தி அசத்தி இருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். உசிலம்பட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் குளிக்கவும் கணக்குப் பார்த்து செலவு செய்யும் கஞ்சர்கள் போல் தான் தண்ணீர் வருகிறது. வயல்கள் வறண்டு கிடக்கின்றன. 15 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் ஒரு யானையை வாங்கி அதை வைத்து ஜீவனம் நடத்துகிறது ஒரு குடும்பம். பலரும் நிலங்களை விற்றுவிட்டு குளத்து வேலைக்குச் சென்று கஞ்சி குடிக்கிறார்கள். இப்படியான ஊரில் ஒற்றை ஆள...
காட்சிப்பிழையும், குருட்டுத் தீர்மானங்களும்

காட்சிப்பிழையும், குருட்டுத் தீர்மானங்களும்

கட்டுரை, சினிமா
தொடர்ந்து ஃபோன் ஒலித்துக் கொண்டே இருந்தது. சிக்னலைத் தாண்டியதும் இடதுபுறம் வண்டியை ஓரங்கட்டிப் பேசினேன். என்னெதிரே ஹெல்மெட் போடாதவர்களை மறித்துக் கொண்டிருந்தார் ட்ராஃபிக் கான்ஸ்டபிள். நான் வண்டியைச் சீராக நகர்த்தியதுமே என்னையும் மறித்தார். ஆவணங்களைச் சரி பார்த்து விட்டு, “உங்களை ஏன் தெரியுமா நிறுத்தினேன்? சிக்னல் விழும் முன்பே, ஃப்ரீ லெஃப்ட் போல் திரும்பிட்டீங்க!” என்றார். நான் கொஞ்சம் திகைத்து, “சார் நான் லெஃப்ட்ல இருந்து வரலை. நேரா வந்தேன். ஃபோன் பேச ஓரமா நிறுத்திட்டு வர்றேன்” என்றேன். லைசென்ஸை என்னிடம் கொடுத்தவாறு, “அவரைப் பாருங்க” என்றார். அவரருகில் போய் நின்றேன். “என்ன கேஸ்?” என்றார். “சார், நான் நேரா வந்தேன். லெஃப்ட்ல இருந்து வந்தேன் எனச் சொல்லி உங்களைப் பார்க்கச் சொன்னார்” என்றேன். “அவரிடம் போய் பேசுங்க” என்றார். மீண்டும் என்னை மடக்கிய கான்ஸ்டபிளிடம் வந்தேன். “என்ன சொன்னார்?” எனக...
ஆண்டவன் கட்டளை விமர்சனம்

ஆண்டவன் கட்டளை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லண்டனுக்குச் செல்ல டூரிஸ்ட் விசா இலகுவாகக் கிடைக்க, ட்ராவல் ஏஜென்ட்டின் அறிவுரைப்படி மணமானவர் என பொய்யான தகவலைப் பாஸ்போர்ட்டில் கொடுத்து விடுகிறார் காந்தி. பின், இந்தியாவிலேயே கிடைக்கும் வேலையைத் தக்க வைக்க, இல்லாத மனைவியின் பெயரைப் பாஸ்போர்ட்டில் இருந்து அகற்ற காந்தி படும்பாடு தான் படத்தின் கதை. போலி ஆவணங்கள் பக்காவாக இருந்தும், காந்தி சொல்லும் ஒரே ஒரு உண்மை அவருக்கு விசா கிடைக்க விடாமல் செய்து விடுகிறது. பிறகு சொன்ன பொய்யை, சரி செய்ய நினைக்கையில் பொய்ப் பொய்யாய்ச் சொல்ல வேண்டிய நிலை உருவாகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், பொய்ச் சோதனையைக் காந்தியால் தாங்க முடியவில்லை. நெட்வொர்க்காய் ஏய்த்து வாழும் சாமானியர்களோடு சாமானியராய் முழி பிதுங்கும் காந்தி, ‘ஷ்ஷ்ப்பாஆஆ.. என்னை விட்டுடுங்கடா. நான் உண்மையையே பேசிச் சமாளிச்சுக்கிறேன்’ என மகாத்மாத்துவம் எய்துவது தான் படத்தின் உச்சக்கட்டம். காந்தியாக விஜ...
குற்றமே தண்டனை விமர்சனம்

குற்றமே தண்டனை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இரண்டு சொற்களாலான தலைப்பிலேயே படத்தின் முழுக் கதையும் சொல்லிவிட்டார் காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன். படத்தில் மிகக் குறைவான கதாபாத்திரங்கள், நான்கைந்து லோக்கேஷன்கள் தான் என்றாலும் மிக நிறைவான படம். இவ்வாறான நேர்த்தியான படங்களின் வரவு அதிகமாக வேண்டும் என்ற ஆவலாதியை ஏற்படுத்துகிறது. இயக்குநர் மணிகண்டன் ஒதுங்கி நின்று நம் மனதோடு அழகாய் கண்ணாமூச்சி விளையாடுகிறார். இளம்பெண் ஒருத்தி இறந்து விடுகிறாள். அவரைக் கொன்றது யாரெனச் சொல்லாமல் நம் முடிவுக்கே படத்தின் முடிவை விட்டுவிடுகிறார். குற்றவாளி யாரெனத் தெரியாத அக்கொலை வழக்கிற்கு, அருண் என்பவனை காவல்துறையினர் பலிகடாவாக்குகின்றனர். ஆனால், சந்தேகத்தின் பலனை அருணுக்குப் பார்வையாளர்களும் அளித்துவிடக் கூடாதென, மக்களின் கூட்டு மனசாட்சிக்கு ஒரு 'செக் (check)' வைக்கிறார். அருண் பணக்காரத் திமிர் கொண்டு பெண்கள் பின்னாடி சுற்றும் ஊதாரி இளைஞனெனச் சொல்லி வ...
காக்கா முட்டை விமர்சனம்

காக்கா முட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாசாங்கற்ற ஜாலியானதொரு படம். ஆனால், சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய பிரக்ஞையையும், சம கால அபத்தங்களையும் மிகத் தெளிவாகச் சித்தரிக்கிறது ‘காக்கா முட்டை’. இப்படம், சிறந்த குழந்தைகள் படமாக தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதே போல் மேலும் பல படங்களைத் தயாரிக்க நடிகர் தனுஷுக்கும், இயக்குநர் வெற்றிமாறனுக்கும் வாழ்த்துகள். சாக்கடையாகிவிட்ட கூவம் நதிக்கரையில் வாழும் குப்பத்துச் சிறுவர்களான சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும் சகோதரர்கள். நடிகர் சிம்பு திறந்து வைக்கும் ‘பீட்சா ஹட்’டில் பீட்சா சாப்பிட வேண்டுமென அவர்களுக்கு ஆசை எழுகிறது. அந்த ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சின்ன காக்கா முட்டையாக ரமேஷும், பெரிய காக்கா முட்டையாக விக்னேஷும் அச்சு அசலாக வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சிறுவன் ரமேஷின் புன்னகையையும், முக பாவனைகளையும் உங்கள் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்வீ...