Shadow

Tag: இயக்குநர் வினோத்

துணிவு விமர்சனம்

துணிவு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
'யுவர் வங்கி'க்குள் நுழைந்து துணிகர கொள்ளையில் ஈடுபடுகிறார் டார்க் டெவில் எனும் சர்வதேசக் குற்றவாளி. ஆனால் டெவிலின் நோக்கம், பணத்தைக் கொள்ளையடிப்பது மட்டுமன்று எனப் புரிந்து கொள்கிறார் டிஜிபி தயாளன். டார்க் டெவில் யார், அவரது நோக்கமென்ன என சுவாரசியமாகக் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் ஹெச். வினோத். பத்திரிகையாளர் மைபாவாக வரும் மோகனசுந்தரம் கலகலப்பிற்கு உதவியுள்ளார். ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை உதாசீனப்படுத்திவிட்டு, நொடியில் பத்து லட்சம் பணம் பார்க்கும் அவரது சந்தர்ப்பவாதத்தின் மூலமாக, மீடியாவின் இன்றைய போக்கை நயமாகக் கேலி செய்துள்ளார் இயக்குநர். வங்கியைக் கொள்ளையடிக்க இறங்கும் முதல் குழுவின் தலைவனாக ராஜதந்திரம் படத்து நாயகன் வீரா நடித்துள்ளார். வங்கிக்கு வெளியில் இருந்து அஜித்திற்கு உதவும் கண்மணியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். நாயகனுக்குச் சமமாகக் குண்டடிகள் பெற்றும், அதை மீறி சாகசம் செய்...
துரிதம் – இயக்குநர் ஹெச். வினோத்தின் சீடர் இயக்கிய படம்

துரிதம் – இயக்குநர் ஹெச். வினோத்தின் சீடர் இயக்கிய படம்

சினிமா, திரைச் செய்தி
இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை. ஆனால் முதன்முறையாக அந்தக் குறையைப் போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் ‘துரிதம்’. இயக்குநர் ஹெச்.வினோத்தின் சீடர் இயக்குநர் சீனிவாசன் துரிதம் படத்தை இயக்கியுள்ளார். 'சண்டியர்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார். கதாநாயகியின் தந்தையாக இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பாலசரவணன் மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார். புதியவரான நரேஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராகப் பணியாற்றிய வாசன் என்பவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்சன் காட்சிகளை மணி ...
நேர்கொண்ட பார்வை விமர்சனம்

நேர்கொண்ட பார்வை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ! - புதுமைப் பெண், பாரதியார் மகாகவி இறந்தே 100 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. ஆனால், ஆண் வகுத்த வல்லாதிக்க விதிகளை மீறி, பாரதி கனவு கண்ட புதுமைப் பெண் என்பது இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்பின் மூலம், இந்த இழிநிலையை மீண்டும் பொதுத்தளத்தில் ஓர் அழுத்தமான விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார் இயக்குநர் வினோத். ‘அர்ஜுன் ரெட்டி’ போன்று ஆணாதிக்கத்தை ஹீரோயிசமாகப் பேசும் படத்தினை ரீமேக் செய்யும் சம காலத்தில், அஜித் போன்ற மாஸ் ஹீரோ, “பின்க் (Pink)” எனும் அற்புதமான ஹிந்திப் பட...
பிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்

பிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்

சினிமா, திரைத் துளி
Bayview Projects LLP நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைக்கிறார் போனி கபூர். விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், பாக்ஸ் ஆபிஸிஸ் வசூலையும் அள்ளிய “பிங்க்” எனும் ஹிந்திப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் இது. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மூலம் பாராட்டுக்களைக் குவித்த H. வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்ட பின் விரைவில் அறிவிக்கபடுவார்கள். இந்தப் படம் இன்று அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. “ 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு நாள் அஜித் பிங்க் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தைத் தெரிவித்தார்...
தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சதுரங்க வேட்டை இயக்குநரின் அடுத்த படைப்பு என்ற ஆவல் ஒரு பக்கம் என்றால், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் போலீஸைக் கெளரவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் என்று எதிர்பார்ப்பு மறுபக்கம். இந்த ஆவலையும் எதிர்பார்ப்பையும் இயக்குநர் வினோத் நூறு சதவிகிதம் பூர்த்திச் செய்துள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாக, நெடுஞ்சாலையில் ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளில் நடக்கும் கொடூரமான கொலை, கொள்ளைகளைத் துப்புத் துலக்கி, அதற்குக் காரணமானவர்களை எப்படிக் கஷ்டப்பட்டு கொள்ளையர்களின் வேரைத் தீரன் திருமாறன் கலைகிறார் என்பதே படத்தின் கதை. ராஜஸ்தானின் பவேரியர்கள் செய்தது திருட்டில் வராது; வழிப்பறிக் கொலையில் வரும். ஐந்தல்லது ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டால் அது வழிப்பறி (Dacoity) ஆகும். பவேரியர்கள் கொடூரமாக அடித்துக் கொல்கிறார்கள் என்ற சித்தரிப்போடு நிறுத்திக் கொள்ளாமல், அம்மனநிலைக்கான பின்புலத்...