Shadow

Tag: இயக்குநர் வெற்றிமாறன்

“மாயாஜாலத்தை ஏற்படுத்தியுள்ளார் சமுத்திரக்கனி” – வெற்றிமாறன் | கருடன்

“மாயாஜாலத்தை ஏற்படுத்தியுள்ளார் சமுத்திரக்கனி” – வெற்றிமாறன் | கருடன்

சினிமா, திரைச் செய்தி
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'கருடன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கருடன்' திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்ப...
“இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி” – வெற்றிமாறன் | தனுஷ்

“இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி” – வெற்றிமாறன் | தனுஷ்

சினிமா, திரைச் செய்தி
கனெக்ட் மீடியா, PK ப்ரைம் ப்ரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினைத் துவங்கி வைத்தார். இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு. கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு. ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு முதலான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர். இயக்குநர் வெற்றிமாறன், “இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி. அது எப்போதும் நிலையானது. இங்கு நம் வாழ்க்கையின் அத்தனை தருணங்களிலும் அவர் உடன் இருந்...
“வெற்றிமாறனை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசை” – அமீர் | மாயவலை

“வெற்றிமாறனை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசை” – அமீர் | மாயவலை

சினிமா, திரைச் செய்தி
அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'மாயவலை' ஆகும். சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் 'தயா' செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள 'மாயவலை' திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, வீரமணி கணேசன் கலை இயக்கத்தைக் கையாண்டுள்ளார். சண்டை பயிற்சிக்கு பிரதீப் தினேஷும், வடிவமைப்புக்கு கோபி பிரசன்னாவும் பொறுப்பேற்றுள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்த...
“தீனா குழந்தை மாதிரி” – அமீர் | மாயவலை

“ரைட்டர்: மாறுபட்ட கோணத்தில் போலீஸின் வாழ்க்கை” – இயக்குநர் வெற்றிமாறன்

“ரைட்டர்: மாறுபட்ட கோணத்தில் போலீஸின் வாழ்க்கை” – இயக்குநர் வெற்றிமாறன்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் ரைட்டர் திரைப்படத்தின் சிறப்புகாட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். படம் பார்த்த பிறகு இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குநர் பிராங்க்ளினையும் கட்டிப்பிடித்து பாராட்டுக்களைத் தெரிவித்தார். “மிக முக்கியமான படத்தைத் தமிழ் சினிமாவிற்குத் தந்திருக்கிறார்கள். சமுத்திரக்கனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது. இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட வரிசையில் ரைட்டரும் இருக்கும். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சிறப்பாகத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட படங்களைத் தயாரித்து வரும் இரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்களும் அன்புகளும். ரொம்ப நாளுக்கு முன்பாகவே விவாதிக்கப்பட வேண்டிய ஒரு ...
காக்கா முட்டை விமர்சனம்

காக்கா முட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாசாங்கற்ற ஜாலியானதொரு படம். ஆனால், சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய பிரக்ஞையையும், சம கால அபத்தங்களையும் மிகத் தெளிவாகச் சித்தரிக்கிறது ‘காக்கா முட்டை’. இப்படம், சிறந்த குழந்தைகள் படமாக தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதே போல் மேலும் பல படங்களைத் தயாரிக்க நடிகர் தனுஷுக்கும், இயக்குநர் வெற்றிமாறனுக்கும் வாழ்த்துகள். சாக்கடையாகிவிட்ட கூவம் நதிக்கரையில் வாழும் குப்பத்துச் சிறுவர்களான சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும் சகோதரர்கள். நடிகர் சிம்பு திறந்து வைக்கும் ‘பீட்சா ஹட்’டில் பீட்சா சாப்பிட வேண்டுமென அவர்களுக்கு ஆசை எழுகிறது. அந்த ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சின்ன காக்கா முட்டையாக ரமேஷும், பெரிய காக்கா முட்டையாக விக்னேஷும் அச்சு அசலாக வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சிறுவன் ரமேஷின் புன்னகையையும், முக பாவனைகளையும் உங்கள் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்வீ...
உதயம் விமர்சனம்

உதயம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மழைப் பொய்த்த மாரிக் காலத்திற்கு பின் வரும் கடும்கோடையின் வறட்சி போல தமிழ்த் திரைப்படங்களில் கதைக்கான வறட்சி நிலவுகிறது.கதையில் பல ‘மீண்டும்’. பதின்மத்தில் இருக்கும் நாயகி காதல் வயப்படுகிறாள். அவளை, காவலை மீறி நாயகன் தூக்கிச் செல்கிறான். தங்களை துரத்துபவர்களிடம் இருந்து காதலர்கள் தப்பினரா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வியக்க வைக்கிறார். இது அவரது முதற்படமாக வர வேண்டிய திரைக்கதை என சொல்லப்படுகிறது. பிருத்விராஜ் – சம்யுக்தா கதை எண்ணற்ற முறை சொல்லப்பட்டு விட்டாலும், அதை மற்றொரு முறை சுவாரசியமாக சொல்ல முயன்றுள்ளார். படத்திலிருந்து பார்வையாளனை விலகாமல் பார்த்துக் கொள்கிறார். ஆனால் படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. உதாரணம் நாயகி போலவே நாயகன் “எப்படி”யும் வந...