Shadow

Tag: எஸ்.எஸ்.ராஜமெளலி

‘தேன்க் யூ டார்லிங் பிரபாஸ்” – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி

‘தேன்க் யூ டார்லிங் பிரபாஸ்” – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி

இது புதிது
எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருந்த பாகுபலி திரைப்படம் இந்தியத் திரையுலகில் புதிய சரித்திரம் படைத்தது. பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்து வானாளவு உயர்ந்தது. பாகுபலியின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தைக் காட்டிய இந்த நடிகர்-இயக்குநர் கூட்டணியின் நட்புறவு, படத்தைத் தாண்டியும் அவ்வப்போது ரசிகர்களைத் தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றது. அப்படி சமீபத்தில், நடிகர் பிரபாஸ், இயக்குநர் ராஜமௌலியை வாழ்த்திய இந்த சம்பவமும் இணைந்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இதற்காக மெகா ஸ்டார் பிரபாஸ் அவரை வாழ்த்தி இணையத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். "@ssrajamouli அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் ஃபிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குநருக்க...
ஆயிரம் மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்கள் கடந்த RRR

ஆயிரம் மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்கள் கடந்த RRR

சினிமா, திரைத் துளி
எஸ்.எஸ்.ராஜமௌலியின் “RRR (ஆர் ஆர் ஆர்)” திரைப்படம் 1000 மில்லியன் நிமிடங்கள் பார்வை நேரத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு திரைப்படமான RRR, மே 20, 2022 அன்று ஜீ5 தளத்தில் திரையிடப்பட்டது. இப்படம் தற்போது 1000 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து (தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம்) நான்கு மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., “நீங்கள் அனைவரும் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள RRR திரைப்படத்தின் மீது காட்டும் அன்பிற்கு மிகுந்த நன்றி. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்திற்குப் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. உங்கள் மகத்தான வரவேற்பைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார். நடிகர் ராம் சரண், “ஜீ5 இல் வெளியாகியுள்ள ‘ஆர் ஆர் ஆர்’ மீத...
RRR விமர்சனம்

RRR விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு படைப்பாளி, பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாய்க் கொண்டு, அதைத் தன் பார்வையாளர்களுக்கு, விஷுவல் அழகினை மேம்படுத்திக் கொடுத்தால்? ரத்தம் - ரணம் - ரெளத்திரம் பாகுபலி எனும் அதி பிரம்மாண்டத்திற்குப் பிறகு, ராஜமெளலியின் மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு. பாகுபலியில் பேரருவியின் அழகு விஷுவலில் திரைக்குள் ஈர்க்கும் ராஜமெளலி, இப்படத்தில், பெருங்கூட்டத்திற்குள் ஒற்றை ஆளாய்ப் பாயும் ராம்சரணின் தீரத்தில் நம்மைத் தூக்கி உள்ளே போட்டுவிடுகிறார். சாத்தியமில்லாத ஒரு காட்சியைச் சாத்தியமாக்கி, அவரது மேஜிக்கிற்குக் கட்டுண்ட வைக்கிறார். படத்தின் முதற்பாதி முழுவதும் ஒவ்வொரு ஃப்ரேமிலுமே ஆச்சரியப்பட வைக்கிறார். 186 நிமிடங்கள் நீள படம் என்பதெல்லாம், இன்றைய சூழலில் பார்வையாளர்கள் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறை. ஆனால், ராஜமெளலியின் மேஜிக் ஷோவில் நேரம் போவதே தெரியவில்லை. The StoRy - The FiRe - The WateR என...
பாகுபலி 2 விமர்சனம்

பாகுபலி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகுபலி - தொடக்கம் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் எவ்வளவு உழைப்பினைச் செலுத்தியுள்ளனர் என்ற பிரமிப்பு, டைட்டில் கார்டிலிருந்தே தொடங்கி விடுகிறது. நல்ல திரையரங்கில் இப்படத்தினைப் பார்த்தால், அதன் பிரம்மாண்டத்தில் இருந்தும், விஷூவல் மேஜிக்கில் இருந்தும் மீளக் குறைந்தது ஓரிரு நாட்களாவது ஆகும். நேரடியாக ஃப்ளாஷ்-பேக்கிற்குள் நுழைந்து விடுகின்றனர். இயக்குநர் ராஜமெளலி சொன்னது போல், கதாபாத்திரங்களை முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளார். உண்மையில், கதை இந்த முடிவில் தான் தொடங்குகிறது. படத்தின் முதல் பாதி மிக அற்புதமானதொரு கலைப் படைப்பு. அமரேந்திர பாகுபலியின் அசத்தலான அறிமுகம், பிங்கலதேவனின் வில்லத்தனம், தேவசேனையின் அறிமுகம், கள்வர்களுடனான சண்டை, இயற்கைச் செறிவாய்ப் பூத்துக் குலுங்கும் குந்தல தேசம், தேவசேனை மீதான பாகுபலியின் காதல், கட்டப்பாவின் நகைச்சுவை, பல்வாழ்தேவனின்...
பாகுபலி விமர்சனம்

பாகுபலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
(பாகுபலி - தொடக்கம்) இந்தியாவின் மிக மிகப் பிரம்மாண்டமான படம். மிரட்டியுள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. பேரருவியின் அடிவாரத்தில் வளரும் ‘ஷிவு’-வுக்கு, மலை மீதேறிப் பார்க்க வேண்டுமென்ற தீராத ஆசை, மிகச் சிறிய வயது முதலே கனலாய் எழுகிறது. பலமுறை முயன்றும் மலையில் ஏற முடியாமல் வழுக்கி விழுந்து கொண்டேயிருக்கிறான். அருவியில் இருந்து விழும் மரத்தாலான முகமூடியின் சொந்தக்காரியை எப்படியும் காண வேண்டுமென்ற காதலின் உந்துதலில், ஒருநாள் மலையில் ஏறிவிடுகிறான். அங்கு யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கும் ஷிவு-வுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்விக்களுக்கான பதிலைச் சொல்கிறது பாகுபலியின் தொடக்கம். பாகுபலி என்றால் வலிமையான தோள்கள் உடையவன் எனப் பொருள். அந்தப் பெயருக்கு, ப்ரபாஸ் அநாயாசமாக நியாயம் செய்துள்ளார். இவர் மட்டுமல்ல, நடிகர்கள் அனைவருமே அவர்கள் ஏற்ற கதாப்பாத்திரங்களுக்கு கன கச்சிதமாகப் பொருந்துகின்றனர...