
மாமன் விமர்சனம் | Maaman review
அக்கா மகனுடன் நாயகனுக்கு ஏற்படும் அதீத பிணைப்பும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே படத்தின் கதை.
மாமனுக்கு மிஞ்சிய உறவில்லை என்பது பழமொழி. அதிலும் குறிப்பாகத் தமிழர்கள், 'தாய்மாமன்' உறவிற்கு எப்பொழுதும் கூடுதல் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் அளித்து வந்துள்ளனர். இரண்டு, மூன்று தசாப்தங்களாக உறவினர்களின் பாராமுக மனப்போக்கைக் கிண்டல் செய்யும் வழக்கம் மிகுந்துவிட்ட போதிலும், நண்பர்கள் தங்களுக்குள் 'மாமா - மச்சான்' என்றே உறவுமுறை கொண்டு அழைத்துக் கொள்வது 80 களில் தொடங்கி, போன தசாப்தம் வரையிலுமே கூட உயிர்ப்புடன் இருந்தது. "நீ எனக்கு ரொம்ப முக்கியமான நபர்" என்ற குறியீட்டுச் சொல்லாகவே நட்பிற்குள்ளும் மாமன் என விளிக்கும் பழக்கம் நுழைந்தது. அந்தச் சொல்லும், உறவும் எப்படி மகத்துவம் வாய்ந்தது என்பதைப் படம் பேசுகிறது.
பாசத்துடன் இருப்பதையே முழு நேர வேலையாகச் செய்து கொண்டிருப்பவரைப் பற்றிய படமிது. போதும...





