Shadow

Tag: ஒளிப்பதிவாளர் ராசாமதி

இந்திரஜித் விமர்சனம்

இந்திரஜித் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் ஒருவருக்குத் துணையாக வேலைக்குச் சேர்கிறான் துறுதுறு இந்திரஜித். மருத்துவக் குணம் கொண்ட விண்கல் ஒன்றைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அந்தக் குழு, சவால்களையுக் எதிரிகளையும் சமாளித்துச் சாதித்தனரா என்பதே படத்தின் கதை. படத்தின் எந்தக் காட்சியும் மனதில் பதியவில்லை. ரோலர் கோஸ்டர் பயணம் போலவும், அவசரமானதொரு சாகசப் பயணம் போலவும் படம் முடிகிறது. ராசாமதியின் ஒளிப்பதிவில் கேரளக் காடுகளும், கோவா காடுகளும் கண்களுக்கு மிகக் குளிர்ச்சியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பசுமையையும், இயற்கையின் செழுமையையும் தான் படத்தின் மிகப் பெரிய ஆறுதல். சோனாரிகா என்றொரு கதாநாயகி மின்னல் போல் மின்னி மறைகிறார். பாடலுக்காக மட்டும் வந்து போகிறார். யானை மீது அறிமுகமாகும் அஷ்ரிதா ஷெட்டி தான் படத்தின் நாயகி. அவரும் பாடலுக்காகத்தான் என்றாலும் மின்னி மறையாமல் படம் நெடுகேவும் வருகிறார். ...
இந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம்

இந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம்

சினிமா, திரைச் செய்தி
25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்திரஜித் படத்தைக்கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சக்கரக்கட்டி படத்தை இயக்கிய அவரது இளைய மகன் கலாபிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். கெளதம் கார்த்திக் நாயகனாகவும், சோனாரிகாவும் அஷ்ரிதா ஷெட்டியும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். அக்டோபர் 15 அன்று நடந்த இசை வெளியீட்டு விழாவில், படத்தின் ட்ரெயிலர் திரையிடப்பட்டது. சாகசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லுமென்ற நம்பிக்கையை ட்ரெயிலர் ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவும், VFX-உம் உள்ளதென மகிழ்ச்சியில் உள்ளார் தயாரிப்பாளர் தாணு. ‘இந்தப் படம் கண்டிப்பாகக் காலத்தின் கல்வெட்டாக இருக்கும். இந்தப் படத்தின் வெற்றிக்கு இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் தான் காரணமெனப் பார்க்கும் பொழுதே தெரியும்படி உள்ளது’ எனப் புகழ்ந்தார். கவிஞர் அறிவுமதியின் மகன் இராசாமதி தான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாண்டிச்சேரியில...
வாய்மை விமர்சனம்

வாய்மை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாய்மை – உண்மை தவறாத நிலை இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின், பெண் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதில்லை. ஆனால், அப்படியொரு சூழல் ஏற்படும் கொலை வழக்கு நீதிமன்றத்திற்கு வழங்குகிறது. நீதிபதி 12 பேர் கொண்ட ஜுரி குழுவிடம் அவ்வழக்கை ஒப்படைக்கிறார். அவர்கள் எடுக்கும் முடிவே வழக்கின் தீர்ப்பும்படத்தின் முடிவாகும். கோயில் அறங்காவலர், ஐ.பி.எஸ். அதிகாரி (திருநங்கை), பெண் விமானி, ஓய்வு பெற்ற இராணுவ கர்னல், ரோஸ் ஐ.ஏ.எஸ்., நாடக எழுத்தாளர், இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர், கோடீஸ்வரி, அயல் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பண்டிதர், தத்துவவியலாளர் போன்ற வேறுபட்ட துறையினைச் சேர்ந்த பன்னிரெண்டு பேர் கொண்ட ஜூரி குழு அது. அவர்களுக்குள் உரையாடி, ஏக மனதாக எடுக்கும் முடிவே உறுதியானது. ஒருவர் முரண்பட்டாலும் அந்தத் தீர்ப்பு செல்லாது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு அறைக்குள்ளேயே நிகழ்கிறது. ஆனால், ...