Shadow

Tag: சந்தோஷ் பிரதாப்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனைக் கதைக்களமாகக் கொண்டு நடக்கும் திரைப்படம். குறைவான லோக்கேஷன்களில், திரைக்கதையை நம்பி விரைவாக எடுத்து முடிக்கப்பட்ட பட்ஜெட் படம் என்பதே இதன் சிறப்பம்சம். இப்படம், ஆஹா ஓடிடி-யில் நேரடியாக வெளியாகிறது. டி பிக்சர்ஸ் சார்பாக, இப்படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் தயாள் பத்மனாபன். சிறந்த இயக்குநருக்கான கர்நாடக அரசின் விருதினை இரண்டு முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  வேலையில் இருந்து வரும் ஜெய்குமார், ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறான். அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கிறான். அடுத்த நாள் ஜெய்குமார் இறந்து கிடக்கிறான். பசவண்ணர் அனாதை ஆசிரமத்தில் ஜெய்குமாருடன்  ஒன்றாக வளரும் நண்பர்கள், அவனது மரணத்திற்குப் பழிவாங்க நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் திட்டமிடுவதோடு சரி, அந்தத் திட்டம் தானாக நடக்கிறது. எப்படி எவரால் எனும் ச...
என் பெயர் ஆனந்தன் விமர்சனம்

என் பெயர் ஆனந்தன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
6 அத்தியாயம் படத்தில், "சித்திரம் கொல்லுதடி" எனும் அத்தியாயத்தை இயக்கிய ஸ்ரீதர் வெங்கடேசனின் தனி முதல் படம். அந்தப் படத்தின் சொல்லிக் கொள்ளும்படியான தனித்துவ முயற்சியாக, அவரது குறும்படம் மட்டும் தனித்துக் கவர்ந்தது. 'அடிமை சுதந்திரம்' எனும் குறும்படத்திற்காக சர்வதேச விருதுகள் பெறும் இயக்குநர் சத்யாவிற்கு, திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. முதல் நாள் படப்பிடிப்பின் பொழுது, அவரை முகமூடி அணிந்த நபரொருவர் கடத்தி விடுகிறார். யாரால் ஏன் கடத்தப்பட்டார் என்பதுதான் படத்தின் கதை. தெருக்கூத்துக் கலைஞராக அருணும், நாடகக் கலைஞராக அரவிந்த் ராஜகோபாலும் நிறைவாக தன் பங்கினைச் செய்துள்ளனர். ஜோஸ் ஃப்ராங்கிளினின் இசையில், கலைஞர்கள் தங்கள் வயிற்றுப்பாடினைப் பாடும் பாடல் மனதை ஊடுருவித் துளைக்குமளவு அட்டகாசமாக உள்ளது. புருஷோத்தமன் வீரையனின் பாடல்வரிகள் அவ் உணர்வெழுச்சியைத் தான் படம் தந்திருக்கவேண்டும்....
பொதுநலன் கருதி விமர்சனம்

பொதுநலன் கருதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மக்களின் பொதுநலனில் அக்கறை உள்ளதால், கம்மியான வட்டிக்குப் பணம் தருகிறோம் எனத் தனக்குத் தொழில் கற்றுக் கொடுத்தவரைக் கொன்றுவிட்டுத் தொழிலுக்கு வருகிறார்கள் உத்திரமூர்த்தியும், பாபு சேட்டும். இருவரும் தங்களுக்கென ஓர் எல்லையை வகுத்துக் கொண்டாலும், வளரத் தொடங்கியதும் இருவரில் யார் பெரியவரென்ற போட்டியும் பொறாமையும் முளைவிடுகிறது. அவர்கள் தொழிலாலும், அவர்களுக்கிடையேயான போட்டியாலும், யார் யார் பாதிப்படைகிறார்கள் என்பதே படத்தின் கதை. உத்திரமூர்த்தியிடம் வேலை செய்யும் நெப்போலியனாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகன் என்று சொல்லக்கூடிய கதாபாத்திர அம்சங்கள் அனைத்தையும் பெற்று ஒரு ரவுடியாக அனைவரையும் போட்டுப் பிளக்கிறார். அவரது உயரத்திற்கு ஏற்ற ரஃப்பான ஒரு பாத்திரத்தில் முதன்முறையாகத் தோன்றியுள்ளார். உத்திரமூர்த்தியாக யோக் ஜபீ. அவரை இது போல் பாத்திரத்தில் பலமுறை பார்த்திருந்தாலும், அவர...
தாயம் விமர்சனம்

தாயம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எட்டுப் பேர் நேர்முகத் தேர்விற்காக ஓர் அறையில் கூடுகின்றனர். ஒரு மணி நேரம் நடக்கும் அத்தேர்வின் முடிவில், ஒருவர் தான் உயிருடன் வெளியேற முடியும். அந்த ஒருவர் யார் என்பதே தாயம் படத்தின் கதை. பகடை உருட்டும் பொழுது, தாயம் விழ ஓர் அதிர்ஷ்டம் தேவை. எட்டுப் பேரில் யாருக்கு அந்த அதிர்ஷ்டம் என்பதே படத்தின் தலைப்புக்குப் பொருள். சஸ்பென்ஸ் த்ரில்லரில் யார், ஏன் என்ற கேள்வியைக் கடைசி வரை தக்க வைப்பது ஒரு கலை. ஆனால், ட்விட்டர் காலத்தில் அது காலாவதியாகி விட்ட பாணி. சஸ்பென்ஸை இன்றளவும் சுவாரசியப்படுத்துவது 'எப்படி' என்ற கேள்விக்கான விடை தான். யார், ஏன் என்ற கேள்விகளுக்கான விடையை, முதல் ஷோ பார்ப்பவர்களிடமிருந்து சகலருக்கும் தொழில்நுட்பம் கடத்தி விடுகிறது. எப்படி திரைக்கதை அமைத்துள்ளனர் என்பதுதான் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும். வெற்றி, என்பது இங்கே ரசிகர்கள் மனதில் படம் ஏற்படுத்தும் அழகிய மங்கா நின...