Shadow

Tag: சாம்ஸ்

”என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர் எல்லோரும் தான் என் வெற்றிக்கு காரணம்.” – மைக் மோகன்

”என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர் எல்லோரும் தான் என் வெற்றிக்கு காரணம்.” – மைக் மோகன்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் மோகன் நடிக்கும் 'ஹரா' பட டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புOfficial Teaser https://www.youtube.com/watch?v=NZNAOnLXlCw 🔥🔥தமிழ் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் 'ஹரா'. கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி.  இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது.இந்நிகழ்வில்...தயாரிப்பாளர் S P மோகன் ராஜ் பேசியதாவது…பத்திரிகை நண்பர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள். இப்படம் நாங்கள் தயாரிக்கும் ...
”கும்பாரி ப்ரெண்ட்” விமர்சனம்

”கும்பாரி ப்ரெண்ட்” விமர்சனம்

இது புதிது, திரை விமர்சனம்
இப்பொழுதெல்லாம் பேய் படங்கள் காமெடியாக இருக்கிறது. காமெடிப் படங்கள் என்று சொல்லிக் கொள்ளப்படும் படங்களைப் பார்க்க தியேட்டர் வாசலை மிதிக்கவே பயமாக இருக்கிறது.  சினிமா திரைப்படங்களின் வகைமைகளில் மிகக் கடினமானது காமெடித் திரைப்படங்கள் தான். அதை சிலர் நினைப்பது போல் அவ்வளவு எளிதாக எழுதிவிடவும் முடியாது, எடுத்துவிடவும் முடியாது.  ஆனால் சினிமாத்துறையின் வெளியில் இருந்து பார்க்கும் சிலருக்கு காமெடிப் படங்களை எளிதாக எடுத்துவிடலாம் என்கின்ற நம்பிக்கை இருக்கும் போலத் தெரிகிறது. எனவே வருவோர் போவோர் எல்லாம் காமெடிப் படம் எடுக்கிறோம் என்று சொல்லி, எதையோ எடுத்து வைக்கிறார்கள். அவர்களுக்கு தயாரிப்பாளர்களும் கிடைக்கிறார்கள் என்பது அதைவிட பெரும் கொடுமை. அந்த வரிசையில் நாங்கள் காமெடிப் படம் எடுத்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டு நம்மை சோதிக்க வந்திருக்கும் அடுத்த படம் தான் “கும்பாரி”.உயிருக்கு உயிரா...
Project C – Chapter 2 விமர்சனம்

Project C – Chapter 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஒரு தமிழ்ப்படமே! அதுவும் 88 நிமிடங்கள் மட்டுமே ஓடி, பார்வையாளர்கள் நேரத்தை மிகவும் மதிக்கிறது. மூன்று பாகங்கள் கொண்ட படத்தின், இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு, இந்தியாவின் முதல் சோஃபமோர் (Sophomore) திரைப்படம் என உரிமை கோரியுள்ளனர். பி.எஸ்சி, கெமிஸ்ட்ரி படித்த ராம்க்கு, சரியான வேலை கிடைக்காததால், படுக்கையில் அசைய முடியாமல் இருக்கும் ஒரு மருத்துவரைக் கண்காணிக்கும் வேலையில் சேருகிறான். மருத்துவரின் கண்டுபிடிப்பான ஒரு மருந்திற்கான தேவையைத் (demand) தெரிந்து கொள்ளும், அதன் மூலம் அதீதமாகச் சம்பாதிக்கத் தொடங்குகிறான். அவனிடமுள்ள பணத்தை அபகரிக்க நினைக்கிறாள் சமையல் வேலை செய்யும் பஞ்சவர்ணம். அந்த மருந்திற்கான ஃபார்முலாவைத் தேடியவாறு உள்ளார் பிசியோதெரபிஸ்ட்டாக அவ்வீட்டிற்கு வரும் மருத்துவரின் உதவியாள். பணமும் ஃபார்முலாவும் யாருக்குக் கிடைத்தது என்பதே படத்தின் கதை. வேலையில்லாமல் அல்லலுறு...
சிவி – 2 விமர்சனம்

சிவி – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஷட்டர் (2004) எனும் தாய்லாந்து படத்தை மையப்படுத்தி, 2007 ஆம் ஆண்டு சிவி எனும் படத்தை, கே. சுந்தர் தயாரிப்பில், கே.ஆர்.செந்தில்நாதன் இயக்கினார். மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து, Gonjiam: Haunted Asylum எனும் கொரியன் தொடரை மையப்படுத்தி சிவி - 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார் கே.ஆர்.செந்தில்நாதன். ஆர் மாஸ் ப்ரோடக்ஷன்ஸ் சார்பாக லலிதா கஸ்தூரி கண்ணன், சிவி-2 திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். 'சிவி' படத்தில் பேய் செய்த கொலைகளையும், அக்கொலைகள் நிகழ்ந்த மூடப்பட்டிருக்கும் ஷைன் மருத்துவமனையில் நிலவும் அமானுஷ்யத்தையும் வெளிக்கொணர சில கல்லூரி மாணவர்கள் நெமிலிச்சேரி செல்கிறார்கள். யூ-ட்யூப்பில் லைவாக ஒளிபரப்பி, பார்வையாளர்களை அமானுஷ்யம் இருப்பதாக நம்ப வைத்து சம்பாதிப்பதுதான் அவர்களது திட்டம். ஆனால் சிவியின் முதல் பாகத்துப் பேயான நந்தினி மீண்டும் சார்ஜ் எடுத்துக் கொள்ள, மாணவர்களின் கதி என்னாகிறது என்பதுதான் ...
கோகோ மாக்கோ விமர்சனம்

கோகோ மாக்கோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
96 நிமிடப் படம். தயாரிப்பாளரான அருண்காந்த் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதிப் பாடி இயக்கியதோடு இசையமைத்து, ஒலி வடிவமைப்பு, டப்பிங் இன்ஜினியரிங் செய்து, உடை வடிவமைத்து, கிராஃபிக் டிசைன், கோரியோகிராஃபி என 15 பிரிவில் பங்காற்றி நடித்துமுள்ளார். அருண்காந்திற்கு தனது இசை ஆல்பத்தை வீடியோ ஆல்பமாக மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ராம்குமாரும் தனுஷாவும் வேலன்டைன்ஸ் டே-க்கு ரோட் ட்ரிப் போக, ப்ளூட்டோவை அனுப்பி தனுஷாக்குத் தெரியாமல் வீடியோ ஆல்பத்திற்காகப் படம்பிடிக்கச் சொல்கின்றார் அருண்காந்த். ரோட் ட்ரிப் என்னானது, மியூசிக்கல் வீடியோ ஆல்பம் என்னானது என்பதுதான் படத்தின் கதை. மொத்தப் படப்பிடிப்பையும் 12 நாளில், GoPro கேமிராவில் படம்பிடித்து அசத்தியுள்ளனர். வசனங்களை முன்னரே எழுதாமல், காட்சி நடக்கும் இடத்திற்குச் சென்று, கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு வசனம் எழுதியுள்ளார் அருண்காந்த். அந்த அமெச்சூர்...
இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ

இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
‘கோகோ மாக்கோ’ திரைப்படத்தை இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் வகையில், காதல், நகைச்சுவை மற்றும் இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக Crazy Musical Romantic Road Trip Comedy இருக்கும் என்கிறார் இயக்குநர் அருண்காந்த். இவர் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கவில்லை என்கிற போதிலும், எழுத்து - இயக்கத்துடன் இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு ஆகிய பணிகளையும் செய்திருக்கிறார். நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார். இவர் துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகியாகப் புதுமுகம் தனுஷாவுடன் தரமணி படத்தில் ஆண்ட்ரியாவுடன் ந...
என்னமா கதவுடுறானுங்க விமர்சனம்

என்னமா கதவுடுறானுங்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘ஆவி கம் கேம் (Cam)’ எனும் நிகழ்ச்சி நடத்துபவர் விஷால். ஆவிகளை அறிந்து, அதன் தேவைகளைப் புரிந்து, அதனிடம் பேசி அவைகளை அமைதிப்படுத்தி மறு உலகிற்கு அனுப்பி வைக்கிறார். கோட்டைமேடு எனும் ஊரில் இரத்தக் காட்டேரி உலாவுவதாகத் தெரிய வர, அங்கே கேமிரா மேனுடன் செல்கிறார் விஷால். அங்கே நடக்கும் நம்ப முடியாத அமானுஷ்யச் சம்பவங்கள்தான் படத்தின் கதை. விஷாலாக அர்வி நடித்துள்ளார். பேயின் இருப்பைக் கண்டறிய ஒரு கருவியைப் பயன்படுத்துகிறார் அர்வி. உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத உறைந்த முகம் அவருக்கு. இருட்டான இடங்களில் கருவியோடு அலைந்து, 'எனிபடி இஸ் தேர்?' எனக் கேட்டு, ஆவிகள் எழுப்பும் சத்தத்தை ரெக்கார்ட் செய்து, அவற்றைக் கேட்டு, உணர்ந்து அவைகளின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு அவைகளுக்கு உதவுகிறார் விஷால். ஆவிகள் எழுப்பும் ஒலிகள் வழக்கமான தமிழ்ப்பட பேயின் சத்தங்களாக இல்லாமல், கான்ஜூரிங் போன்ற ஹாலிவுட் படப் ...
உப்பு கருவாடு விமர்சனம்

உப்பு கருவாடு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சினிமாவைத் தவிர வேறொன்றினை அறியாத சந்திரனுக்கு, படம் இயக்க காசிமேடு தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கிறார். பல சிக்கில்களுக்கு மத்தியில், சந்திரனால் அந்தப் படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை. ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான குமரவேல் தான் படத்தின் நாயகன். அவர் பீடி பிடித்துக் கொண்டே முதற்பாதி படத்தில் பட்டும் படாமலும் திரையில் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்துக்கே தான் தான் நாயகனென கருணாகரனை மிக இலகுவாக முந்தி விடுகிறார். மாஞ்சா என்ற அந்தக் கதாபாத்திரத்தின் பலம், அது பிரதிபலிக்கும் சாமானிய முகமே! சாமானியர்களை சினிமா எவ்வளவு கவர்கிறது என்பதற்கும், சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தங்கள் திறமையை வெளிக்காட்டிக் கொள்ள எந்த எல்லைக்குப் போவார்கள் என்பதற்கும் அந்தப் பாத்திரம் ஒரு சான்று. மொழி படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை குணசித்திர வேடத்தில் நடிக்க வைத்...