சிபிராஜின் ‘வட்டம்’ – சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கை
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் அடுத்ததாக, நடிகர் சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” படத்தினைப் பிரத்தியேகமாக நேரடித் திரைப்படமாக வெளியிடுகிறது
சமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்குக் கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'வட்டம்' படத்தினை நேரடித் திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.
‘வட்டம்’ ஒரு த்ரில்லர் திரைப்படம். மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாபாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளும், பரபரப்பான சம்பவங்களும் தான் கதை. இந்தத் தொடர் சம்பவங்கள், அவர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையையும் மொத்தமாக மாற்...