Shadow

Tag: சுரேஷ் காமாட்சி

”ஒரு படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் இருந்தாலே அது நல்ல படம்” – மதிமாறன் டிரைலர் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு

”ஒரு படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் இருந்தாலே அது நல்ல படம்” – மதிமாறன் டிரைலர் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு

சினிமா, திரைச் செய்தி
ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.இவ்விழாவினில்…தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் பேசியதாவது… இது நிஜமா கனவா என அறியமுடியவில்லை. நான் மிகவும் எமோஷனாலாக இருக்கிறேன். நான் ஹாலிவுட்டில் வேலை செய்திருந்தாலும் இங்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் மேடையில் இருப்பது பெருமையாக இருக்கிறது. அண்ணன்கள் தான் தம்பிகளைக் கஷ்டப்பட்டு பெயர் வாங்க வைப்பார்கள். என் அண்ணன் பாலா சீதாராமன், லெனின் இருவருக்கும...
“மாநாடு: என்னைப் போல பேசும் குழந்தைகள்” – மகிழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா

“மாநாடு: என்னைப் போல பேசும் குழந்தைகள்” – மகிழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா

சினிமா, திரைச் செய்தி
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அன்று வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 25 ஆவது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்தப் படத்தின் நன்றி நவில்தல் விழா, டிசம்பர் 21 ஆம் தேதி அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “சமீபகாலமாக ஓடிடி வந்துவிட்டது, கொரோனா வந்துவிட்டது, மழை வந்தால் கூட்டம் வராது என்றெல்லாம் பலவிதமான எதிர்மறை வார்த்தைகளாகவே பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இவை அனைத்தையும் மாநாடு திரைப்படத்தின் வெற்றி தகர்த்துவிட்டது. நல்ல படம் வந்தால் மக்கள் குடையைப் பிடித்துக் கொண்டு கூட கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்பதை இந்தப் படம் நிரூபித்துவிட்டத...
தனுஷ்கோடியில் அஞ்சலியும், நிவின் பாலியும்

தனுஷ்கோடியில் அஞ்சலியும், நிவின் பாலியும்

சினிமா, திரைத் துளி
அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தற்போது சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தனது திரையுலகப் பயணத்திலேயே மிகப் பெரிய படமாக இதை எதிர்பார்க்கிறார் சிலம்பரசன் TR. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதுவரை சுமார் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராம் டைரக்சனில் தனது ஐந்தாவது படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நேற்று முதல் ...
மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’

மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’

சினிமா, திரைத் துளி
அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. விரைவில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், இதையெடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.ஜா கதாநாயகியாக பிரபல இயக்குநரான பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்க இருக்கிறார். இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப் படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆனதால், படம் அவ்வ...
பெண் காவலர்கள் பாராட்டிய ‘மிக மிக அவசரம்’

பெண் காவலர்கள் பாராட்டிய ‘மிக மிக அவசரம்’

சினிமா, திரைச் செய்தி
  மிக மிக அவசரம் - பெண் காவலர்கள் சந்திக்கும் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. ஆனால் இந்தப்படம் போலீஸாருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படமாக இருக்குமோ என்கிற எண்ணம் பலர் மத்தியில் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் அதை தனது வித்தியாசமான அணுகுமுறையால் உடைத்தெறிந்து விட்டார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. காவலர் தினமான நேற்று, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் சுமார் 200 பெண் காவலர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டுக் காட்டினார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி. இந்நிகழ்வு குறித்த விரிவாகப் பகிர்ந்துகொண்ட சுரேஷ் காமாட்சி, “இது ஏதோ பெண் போலீசார் மட்டுமே சந்திக்கும் பிரச்சனைகளைச் சொல்லும் படம் என்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. அனைத்து துறையிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைச் சொல்லும் கதைதான். அந்தவகையில் இந்தப்படத்தின் கதைக்களமாக போலீஸ் துறையைப் பின்...
“கமல் இப்படிச் செய்யலாமா?” – சுரேஷ் காமாட்சி

“கமல் இப்படிச் செய்யலாமா?” – சுரேஷ் காமாட்சி

சினிமா, திரைச் செய்தி
கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களைத் தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, "ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்றன தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கமர்ஷியலாகப் படமெடுத்துச் சம்பாதித்து விட்டுப் போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனைப் பாராட்ட வேண்டும். தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலைத் தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ்த் ...