Shadow

Tag: ஜீரோ டிகிரி

ஜீரோ டிகிரி – வட்டம் தாண்டும் தமிழ்ப் புத்தகங்கள்

ஜீரோ டிகிரி – வட்டம் தாண்டும் தமிழ்ப் புத்தகங்கள்

மற்றவை
ஜீரோ டிகிரி என்பது சாரு நிவேதிதாவின் மிகப் புகழ் பெற்ற நூலாகும். அப்புத்தகத்தின் பெயரில் ஒரு பதிப்பகத்தைத் இணைந்து தொடங்கியுள்ளனர் திருமதி காயத்ரி ராமசுப்ரமணியமும் ராம்ஜி நரசிம்மனும். இப்பதிப்பகத்தின் அறிமுக விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திலுள்ள கலையரங்கில் ஜனவரி 18 அன்று நடைபெற்றது. அறிமுக விழாவில், சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டனர். இவ்விழாவில் எழுத்தாளர்கள், சாருநிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தரராஜன், மதன், பாஸ்கி, கவிதா சொர்ணவேல், ஸ்ரீராம் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்களும், வாசகர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கமாக, கஞ்சிரா கலைஞர் ஹரீஷ்குமார் அவர்களின் தலைமையில...