தக்ஸ் விமர்சனம்
‘ஸ்வாதந்த்ரியம் அர்த்தராத்திரியில்’ எனும் மலையாளப் பட்த்தைத் தழுவி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் பிருந்தா. இரண்டாவது படத்திலேயே, சிறையிலிருந்து தப்பித்துச் செல்லும் ப்ரிஸன் ப்ரேக் (Prison Break) வகைமை படத்தை இயக்கி ஆச்சரியப்படுத்துள்ளார் பிருந்தா. ‘ஹே சினாமிகா’ எனும் அவரது முதற்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
பணத்தைத் திருடிய குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்படுகிறான் சேது. தனது காதலியோடு ஆஸ்திரிலேயா செல்லத் திட்டமிட்டு மாட்டிக் கொள்கிறான். சிறையில் இருந்து தப்பித்து மீண்டும் காதலியோடு நாட்டை விட்டுச் செல்வதற்காகச் சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றான். அதற்காகத் தனது சக அறைவாசிகளைச் சம்மதிக்க வைத்துத் தனது தப்பிக்கும் திட்டத்தை அரங்கேற்ற நினைக்கிறான்.
சிறை கண்கணிப்பாளர் ஆரோக்கியதாஸாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். சிறைக்கைதிகளைத் தனது கட்டு...