Shadow

Tag: தன்யா ரவிச்சந்திரன்

ரசவாதி விமர்சனம்

ரசவாதி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குற்றப்பின்னணியுடன் அறிமுகமாகும் ஒரு காவல்துறை அதிகாரி. சித்த மருத்துவம் செய்து கொண்டு, இயற்கை ஆர்வலராக அமைதியான முறையில் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு சித்த வைத்தியர். இந்த சித்த வைத்தியர் மீதும், அவருக்கு இருக்கும் காதல் மற்றும் காதலி மீதும் இந்தக் காவல்துறை அதிகாரிக்கு தீராத வன்மம். வன்மம் ஏன், வன்மத்தால் விளைந்தது என்ன என்பதே இந்த ரசவாதி திரைப்படத்தின் கதை. மெளனகுரு, மகாமுனி திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சாந்தகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.  சித்தவைத்தியர் சதாசிவ பாண்டியனாக அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார். ஒரு காலை சற்று தாங்கித் தாங்கி நடந்து கொண்டு, யானை போன்ற வனவிலங்குகளின் காலில் உடைந்த மதுபாட்டில்கள் காயத்தை ஏற்படுத்திவிடும் என்கின்ற அக்கறையுடன் அவற்றை அப்புறப்படுத்தும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். சந்திராவாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷிற...
பிரைம்  வீடியோ டைரக்ட்டில்  புராண இதிகாச த்ரில்லரான  சிபிராஜின்  ‘மாயோன்’

பிரைம்  வீடியோ டைரக்ட்டில்  புராண இதிகாச த்ரில்லரான  சிபிராஜின்  ‘மாயோன்’

சினிமா, திரைச் செய்தி
சென்ற ஆண்டு சிபிராஜ் நடிப்பில்,  டபுள் மீனிங் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளியான “மாயோன்” திரைப்படம் திரைப் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.  நல்ல கதையம்சத்துடன் பொழுதுபோக்கிற்கான விசயங்களை உள்ளடக்கி இருந்த காரணத்தால் குடும்பம் குடும்பமாக  இப்படத்தைப் பார்க்க பொதுமக்கள் வந்தனர். மேலும் 47-வது கனடா டொரண்டோ திரைப்பட விழாவில் புராண இதிகாசப் பிரிவில் “மாயோன்” திரைப்படம் விருதினையும் வென்றது. படத்திற்கு இசையானி இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் பெரும் பலமாக அமைந்திருந்தன.விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்  கதை, அதைக் காட்சிப்படுத்திய அழகியல் போன்ற காரணங்களுக்காகவும் அதன் உள்ளடக்கத்திற்காகவும் ,  புராண இதிகாச த்ரில்லர் வகைத் திரைப்படம் என்கின்ற புதுமையான வகைமைக்காகவும் இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் தனித்து...