குலசாமி விமர்சனம்
சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பிரபலங்களுக்கு ஆசை நாயகியாக மாற்ற முனைந்த பேராசியரியைப் பற்றிய வழக்கு. அந்த வழக்கை கதையின் முக்கிய மையச்சரடாகக் கொண்டு விமலுக்கு ஒரு தங்கச்சி எமோஷ்னலைப் புகுத்தி, ஓர் ஆக்ஷன் த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் ஷரவண சக்தி.
மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவிகள் சிலருக்குப் பாலியல் ரீதியிலான அழுத்தம் வருகிறது. மேலும் பெண்களைக் கொடூரமாகக் கற்பழிக்கும் நபர்கள், மிகக் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். விமல் மேற்படியுள்ள சம்பவங்களில் எப்படி லிங்க் ஆகிறார் என்பதாக விரிகிறது குலசாமியின் திரைக்கதை.
விமல் அழுகை, சோகம், கோபம் என அவருக்கே உரித்தான அரிதாரங்களை களைத்துப் போட்டு இப்படியான சோக அவதாரத்தில் ஆடியிருக்கிறார். விளைவு? தேக்கமான அவரது ஸ்கிரீன் ப்ரசெனஸ் படத்திற்குள்...