Shadow

Tag: துளசி

நிறம் மாறும் உலகில் விமர்சனம்

நிறம் மாறும் உலகில் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நிறம் மாறும் உலகில், அதாவது நேரத்துக்குத் தக்கப்படி மாறிக் கொள்ளும் உறவுகளில், என்றுமே மாறாதது தாயின் அன்பு மட்டுமே என அழுத்தமாகச் சொல்கிறது இப்படம். தாயோடு கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறும் அபி எனும் இளம்பெண்ணை, டிடிஆர் நா.முத்துக்குமார் ட்ரெயினில் சந்திக்கிறார். அவர், அபிக்கு நான்கு கதைகளைச் சொல்கிறார். முதல் கதை, மும்பையில் டானாக இருக்கும் அப்துல் மாலிக் பற்றிய கதை. அப்துல் மாலிக்காக நட்டி நடித்துள்ளார். மும்பை சிகப்பு விளக்குப் பகுதியில் பிறக்கும் அப்துல்க்கு அம்மா என்றால் உயிர். அம்மாவின் மரணம் அவனை என்னவாக மாற்றுகிறது என்றும், அம்மாவுடன் இணைந்து கடலிலுள்ள தேவதைகளைக் காணவேண்டுமென்ற அவனது ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை. மாலிக்கின் தொழிற்போட்டியாளராக சுரேஷ் மேனனும், அம்மா ஃபாத்திமாவாக கனிகாவும் நடித்துள்ளனர். தனது பிரத்தியேகமான மாடுலேஷனில், அவர் இ...
பாரதிராஜா, நட்டி நடிப்பில் ஹைபர் லிங்க் கதையான ”நிறம் மாறும் உலகில்“

பாரதிராஜா, நட்டி நடிப்பில் ஹைபர் லிங்க் கதையான ”நிறம் மாறும் உலகில்“

சினிமா, திரைச் செய்தி
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், உணர்வுகளின் அழகியல் குவியலாக உருவாகியுள்ள "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள், இயக்குநர் பா ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லைகா நிறுவன நிர்வாக இயக்குநர் GKM தமிழ்குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி ஆகியோர் தங்கள் சமூக தளம் வழியே இணையத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேச...
சைரன் விமர்சனம்

சைரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நாயகன் 16 வருட காலமாக பரோலில் செல்ல மறுத்து வருகிறான். ஒரு கட்டத்தில் பரோலில் செல்ல சம்மதிக்கிறான். அவன் பரோலில் வெளிவந்த தருணத்தில் அவன் வழக்கோடு தொடர்புடைய நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். போலீஸின் சந்தேகம் நாயகன் பக்கம் திரும்ப துவங்க நாயகன் அப்பழியை மறுக்கிறான். இறந்தவர்கள் எப்படி இறந்து போனார்கள் நாயகனின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை விவரிப்பதே இந்த சைரன் திரைப்படத்தின் கதை.. துவங்கும் போது லாக்கப் மரண வழக்கு விசாரணையில் வென்று தன் காக்கி யூனிபார்மை மீண்டும் போடும் நாயகி நந்தினி, மற்றும் கைதி யூனிபார்மை கலைந்து தன் சொந்த ஆடையை அணிந்து பரோலில் வெளி வரும் நாயகன் திலகவர்மன் என முரணான பின்னணியுடன் துவங்குகிறது திரைப்படம். பின்னர் நாயகனின் முரணான செய்ல்பாடுகளின் மூலம் காட்சிகளின் வழியே திரைக்கதையின் சுவாரஸ்யம் கூடுகிறது. Shadow போலீஸ் ஆக வரும் யோகிப...
“மூன்று நாயகிகளுடன் நடித்திருப்பதை கீர்த்தி தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்” – அசோக்செல்வன்

“மூன்று நாயகிகளுடன் நடித்திருப்பதை கீர்த்தி தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்” – அசோக்செல்வன்

சினிமா, திரைச் செய்தி
அறிமுக இயக்குநர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன் ஆகும். நாயகிகளாக மேகா ஆகாஷும், கார்த்திகா முரளிதரனும், சாந்தினி செளத்ரியும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூட்யூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ’ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமனும், பிரபு ராகவும் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். Clear water பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், i Cinem...
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் நாயகி,  தன் அம்மாவின் மறைவுக்குப் பின்னர், தனக்குத் துணையாக ஒரு குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார்.  அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்பாமல்,  தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.  இதற்காக  மருத்துவரை சந்தித்து விளக்கம் கேட்கும் நாயகி அங்கிருக்கும்  ஸ்பேர்ம் டோனார்கள் மீது ஏற்பட்ட திருப்தியின்மையினால் தன் வயிற்றில் உருவாகப் போகும் குழந்தைக்கு உயிர் கொடுக்கும் (ஸ்பேம் கொடுக்கும்) டோனாரை நானே தேர்வு செய்து அழைத்து வரலாமா என்று கேட்க, டாக்டரும் அதற்கு சம்மதிக்க. தனக்கான ஸ்பேம் டோனாரைத் தேடி தன் தோழியுடன் அலைகிறார்.  அப்படி நாயகியும் அவள் தோழியும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் நாயகன் ஒருகட்டத்தில் நாயகியை விரும்பத் துவங்க, சிக்கல் முளைக்கிறது.  இதற்குப் பின்னர் என்ன ஆனதே என்பதே மிஸ் ஷெட்டி மிஸ்...
ரிச்சி விமர்சனம்

ரிச்சி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரிச்சி எனும் ரிச்சர்ட்டின் வாழ்க்கை எவ்வாறு எதனால் திசை மாறி, அவன் வாழ்க்கை என்னானது என்பதுதான் படத்தின் கதை. 2014இல் வெளியான 'உள்ளிடரு கண்டன்தே' என்ற கன்னடப் படத்தின் ரீமேக் ஆகும். ஓர் அசாத்திய பொறுமையைக் கோருகிறது படம். துண்டு துண்டாய், அத்தனை கதாபாத்திரங்களைக் கொண்டு, இயக்குநர் கதையை நேர்க்கோட்டிற்குக் க்ளைமேக்ஸில் கொண்டு வரும் முன் ஒரு வழியாகிவிடுகிறோம். படத்தில் கையாண்டுள்ள கதை சொல்லும் பாணிக்கு நாம் தயார் ஆகாதது ஒரு காரணம் என்றாலும், மெதுவாகத் தனித்தனி காட்சிகளாகக் கோர்வையற்று நகரும் திரைக்கதையே அதற்குப் பிரதான காரணம். தூத்துக்குடியைக் கதைக்களமாகக் கொண்டதால் கிறிஸ்துவப் பின்னணியில் கதை நகர்கிறது. கதை தொடங்கும் முன், அனிமேஷனில் சொல்லப்படும் மீனவன் கதையை உள்வாங்கிக் கொள்ள முடியாதளவு வேகமாகவும் அந்நியமாகவும் உள்ளது. அந்த முன் கதை, படத்தின் கதையைப் புரிந்து கொள்ள அவசியம். அது என்ன சிலை...