Shadow

Tag: நிகில் மோகன்

சதுரஅடி 3500 விமர்சனம்

சதுரஅடி 3500 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாஃபியாகளிடம் ரியல் எஸ்டேட் சிக்கிக் கொண்டது என்பதன் குறியீடு தான் படத்தின் தலைப்பு. ஸ்டீஃபன் எனும் சிவில் இன்ஜினியர் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்படுகிறார். அவரது ஆவி அந்த பில்டிங்கில் சுற்றுவதாக பீதி பரவ, அதை விசாரிக்க எஸ்.ஐ. கர்ணா நியமிக்கப்படுகிறார். ஸ்டீஃபன் கொலையிலுள்ள மர்மமென்ன என்பதுதான் படத்தின் கதை. படம் நேரடியாகக் கதைக்குச் செல்லாமல், கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வதற்குப் போதுமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. ரஹ்மான், நிகில் மோகன், தலைவாசல் விஜய், ஸ்வாதி தீக்ஷித், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, ஆகாஷ், இனியா, மனோபாலா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தின் அறிமுகம் முடிந்த பின்னும், திரைக்கதை சூடு பிடிக்காதது படத்தின் மிகப் பெரும் குறை. அதை விட கொடுமையான சங்கதி, ரஹ்மான் இரண்டே காட்சிகளில் தலைகாட்டுவதோடு மாயமாகி விடுகிறார். நாயகி ஸ்வாதி தீக்ஷித்தோ மூன்றே மூன்று காட்சியில...
சஸ்பென்ஸ் வருடத்தில் – சஸ்பென்ஸ் படம்

சஸ்பென்ஸ் வருடத்தில் – சஸ்பென்ஸ் படம்

சினிமா, திரைச் செய்தி
ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஜூன் 25 அன்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். படத்தின் இயக்குநர் ஜாய்சன் பேசுகையில், “இது என்னுடைய முதல் தமிழ்த் திரைப்படம். இது ஒரு த்ரில்லர் படம். நடிகர் ரகுமான், நடிகை இனியா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்’ எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்தர் பேசுகையில், “இந்தப் படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். அவருடன் பாடல் எழுதிய அனுபவம் மறக்க முடியாத நினைவுகள். சென்னையி...