
ராதிகா: லேடி கமல்ஹாசன் | தாய் கிழவி
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார், “’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் ராதிகா கலக்கி இருக்கிறார். நான் நடித்த ‘ஆழி’ படமும், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது போல! ஊர்ப்பக்கம் தாய் கிழவி என்றால் அனைவரையும் அரவணைத்துக் கட்டிக்காப்பவரைதான் அப்படிக் கூப்பிடுவோம். அத்தகைய டைட்டில் ரோலில் நடிக்க உழைப்பு, அர்ப்பணிப்பு, தன் மீது நம்பிக்கை வேண்டும். திரையுலகில் 50 வருடங்கள் நெருங்குகின்ற ராதிகாவிற்கு நான் சொன்ன அனைத்தும் இருப்பதால்தான் இந்தப் படத்தில் தைரியமாக நடித்திருக்கிறா...









