Shadow

Tag: பவன்

அரிமாப்பட்டி சக்திவேல் விமர்சனம்

அரிமாப்பட்டி சக்திவேல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிமாப்பட்டி என்கின்ற கிராமத்தில் இன்றளவும் இருந்து வரும் சாதியக் கொடுமைகளைப் பற்றி ஆவணப்படுத்தும் திரைப்படம் தான் அரிமாப்பட்டி சக்திவேல்.கதை என்று பார்த்தால் பழகி சலித்தக் கதை தான். கீழ் சாதி என்று சொல்லப்படுப்படும் வகுப்பை சேர்ந்த நாயகன், மேல் சாதி என்று சொல்லப்படும் வகுப்பை சேர்ந்த நாயகி. இருவருக்குமான காதல், சாதிய பாகுபாட்டால் அந்த காதலுக்கு வரும் எதிர்ப்பு, தனிப்பட்ட முறையில் நாயகனுக்கு முதலில் இயக்குநராக வேண்டும், பின்பு தான் திருமணம் என்கின்ற லட்சியம், இந்தப் பிரச்சனைகளையெல்லாம் கடந்து காதல் கைகூடியதா..? இல்லையா..? என்பதே அரிமாப்பட்டி சக்திவேலின் மொத்தக் கதை.கதையாகவும் திரைக்கதையாகவும் பார்த்தால் எந்த வித புதுமையும் சுவாரஸ்யமும் இல்லை. குறைந்தபட்சம் காட்சி அமைப்புகளாவது ஈர்ப்புடன் அமைக்கப்பட்டு இருக்கிறதா..? என்றால் அதுவும் இல்லை.சமூகத்தில் நில...
வடசென்னை விமர்சனம்

வடசென்னை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரசாங்கம் மக்களுக்குச் செய்யும் துரோகம், வளர்த்து விட்டவருக்கு அவரது பிள்ளைகள் செய்யும் துரோகம், நட்பெனும் போர்வையில் நம்பியவர்களுக்குச் செய்யப்படும் நம்பிக்கைத் துரோகம், பழிவாங்க உறவாடிக் கெடுக்கும் துரோகம் என துரோகத்தின் அத்தனை வடிவங்களையும் கொண்டுள்ளது வடசென்னை. இப்படம், மெட்ராஸ் போலவும், காலா போலவும், 'நிலம் எங்கள் உரிமை' என்பதையே பேசுகிறது. வளர்ச்சியெனும் பேரில் மீனவக் குப்பங்களும், அதன் மனிதர்களும் எப்படி அந்நியப்படுத்தப்பட்டு நசுக்கப்படுவார்கள் என அமீர் பேசும் அரசியலைச் சேலம் எட்டு வழி பாதை திட்டத்தோடு பொருத்திப் பார்த்தால் படத்தில் இழையோடும் அரசியலின் வீரியம் புரியும். அமீரின் பாத்திரம் தெறி! வெற்றிமாறன், மேக்கிங்கிலும் கதைசொல்லும் பாணியிலும் மிகுந்த சிரத்தை எடுத்து அசத்தியுள்ளார். ஒரு நேர்க்கோட்டுக் கதையை, பல அத்தியாயங்களாகப் பிரித்து, மூன்று கதாபாத்திரங்களுக்குள் உள்ள தொடர்பாகத...
மணியார் குடும்பம் விமர்சனம்

மணியார் குடும்பம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது மகன் உமாபதியை அவையத்துள் முந்தி இருக்கச் செய்ய, கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி, மணியார் குடும்பத்தை இயக்கித் தயாரித்துள்ளார் தம்பி ராமையா. "லவ் பண்ணுங்க சார். லைஃப் நல்லா இருக்கும்" என மைனா படத்தில் பேசிய வசனத்தை ஒன்-லைனாக எடுத்துக் கொண்டுள்ளார் தம்பி ராமையா. மாமன் மகனான குட்டிமணியைக் காதலிக்கிறாள் அத்தை மகளான மகிழம்பூ. அந்தக் காதலால் குட்டிமணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை. காவல்துறை உயரதிகாரி நல்லவனாக சமுத்திரக்கனி இரண்டு காட்சிகளில் தோன்றி மறைகிறார். "என் தம்பி" என்ற அடைமொழியுடன் அவரது பெயரைத் திரையில் காட்டுகிறார் தம்பி ராமையா. 'கலக்கப் போவது யாரு' ராமரும் தங்கதுரையும், சிங்கம்புலி, சிங்கமுத்து, ராதாரவி Y.G.மகேந்திரன் போன்றோர் கெளரவத் தோற்றத்தில் வருகின்றனர். அனைவரும் தனக்குரிய காட்சிகளை நிறைவாகச் செய்துள்ளனர். ஒரு பாடலுக்கு யாஷிகா ஆனந்த் நடனமாடியுள்ள...