Shadow

Tag: பாக்கியராஜ்

“சீனியர் எனக்கில்லாத ஃபீலிங்கா?” – பாக்கியராஜ்

“சீனியர் எனக்கில்லாத ஃபீலிங்கா?” – பாக்கியராஜ்

சினிமா, திரைச் செய்தி
ஆணவக்கொலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் "தொட்ரா". இயக்குநர் பாக்கியராஜின் சீடரான மதுராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி நாயகனாக நடித்துள்ளார்.  அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாண்டியராஜன், “ப்ரித்வி இவ்வளவு நண்பர்களைச் சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும். ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியைப் பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது” என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார். நிகழ்ச்ச...
அய்யனார் வீதி விமர்சனம்

அய்யனார் வீதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகுபலி 2 படத்தினுடைய வெளியீட்டின் பொழுது நமக்கென்ன வேலை என்று தமிழ், தெலுங்கு, ஹிந்தித் திரையுலகங்கள் வசவசவென்ற வெளியீட்டில் இருந்து சற்றே ஓய்வெடுத்துக் கொள்ள, ‘அய்யனார் வீதி’ எனும் படமெட்டும் பாகுபலியுடன் சேர்ந்து வெளியாகி, வரலாற்றில் தனக்கென்றொரு நிரந்திர இடத்தைப் பிடித்துள்ளது இப்படம். ‘நாட்டாமை’ படத்தின் கரு, ‘நட்புக்காக’ படத்தினுடைய கதையின் கரத்தைப் பற்றி ‘அய்யனார் வீதி’க்குள் திரைக்கதையாக நுழைந்துள்ளது. அய்யனார் வீதி என்பது ஊர்ப் பெயர். அய்யனாராக பொன்வண்ணனும், சுப்ரமணிய சாஸ்திரிகளாக கே.பாக்கியராஜும், செந்திலாக யுவனும் நடித்துள்ளனர். ‘படத்தில் யூத் சப்ஜெக்ட்டே இல்லையே! இளைஞர்களைக் கவர யூத் சமாச்சாரம் சேருங்க’ என பாக்யராஜ் கேட்டுக் கொண்டதால், இயக்குநர் யுவனை இணைத்துள்ளார். இப்படிப் படத்தில் மூன்று கதாபாத்திரங்கள் இருந்தும், திரைக்கதை எவர் மீதும் பயணிக்காமல் தன்னியல்பில் தேமோவெனச் ...
வாய்மை விமர்சனம்

வாய்மை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாய்மை – உண்மை தவறாத நிலை இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின், பெண் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதில்லை. ஆனால், அப்படியொரு சூழல் ஏற்படும் கொலை வழக்கு நீதிமன்றத்திற்கு வழங்குகிறது. நீதிபதி 12 பேர் கொண்ட ஜுரி குழுவிடம் அவ்வழக்கை ஒப்படைக்கிறார். அவர்கள் எடுக்கும் முடிவே வழக்கின் தீர்ப்பும்படத்தின் முடிவாகும். கோயில் அறங்காவலர், ஐ.பி.எஸ். அதிகாரி (திருநங்கை), பெண் விமானி, ஓய்வு பெற்ற இராணுவ கர்னல், ரோஸ் ஐ.ஏ.எஸ்., நாடக எழுத்தாளர், இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர், கோடீஸ்வரி, அயல் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பண்டிதர், தத்துவவியலாளர் போன்ற வேறுபட்ட துறையினைச் சேர்ந்த பன்னிரெண்டு பேர் கொண்ட ஜூரி குழு அது. அவர்களுக்குள் உரையாடி, ஏக மனதாக எடுக்கும் முடிவே உறுதியானது. ஒருவர் முரண்பட்டாலும் அந்தத் தீர்ப்பு செல்லாது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு அறைக்குள்ளேயே நிகழ்கிறது. ஆனால், ...