Shadow

Tag: பார்வதி நாயர்

பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ – Sun NXT-இல் வெளியாகிறது

பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ – Sun NXT-இல் வெளியாகிறது

சினிமா, திரைத் துளி
பார்வதி நாயர் நடிப்பில் வரும் 'உன் பார்வையில்' எனும் ஓர் அதிரடியான த்ரில்லர் படம், டிசம்பர் 19 அன்று, தென்னிந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான Sun NXT-இல் நேரடியாக வெளியாகிறது. இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையைத் தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகிற்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. தன்னுடைய வலுவான நடிப்பால் படத்தை முழுவதுமாக தாங்கிச் செல்லும் பார்வதி நாயரின் நடிப்பு, படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. திரைக்கதையின் மர்ம மரணங்களின் விசாரணைப் பக்கத்தில், முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார். மேலும், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிழல்கள் ரவி ஆகியோரின் வலுவான நடிப...
“சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு..” – பார்வதி நாயர்

“சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு..” – பார்வதி நாயர்

சமூகம்
அன்பான ரசிகர்களே, நண்பர்களே, அன்புமிக்க பொதுமக்களே! கடந்த வாரத்தில் என்னைப் பற்றிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கட்டுரைகளும் காணொளிகளும் வெளியாகின. இது தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு குறித்தும், இப்பிரச்சனையைப் பற்றி தெளிவுபடுத்துவதற்கும், பொய்யுரையைப் புரிய வைப்பதற்கும் இந்தச் செய்திக்குறிப்பை வெளியிடுகிறேன். எனது உடைமைகள் திருடப்பட்டதால், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சிலர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 20.10.2022 அன்று புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தேன். நான் சட்டத்தின் சரியான செயல்முறையைப் பின்பற்றி வருகிறேன். மேலும் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு எனக்கான தீர்வுகளைப் பெறுவதற்காக சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறேன். சுபாஷ் சந்திர போஸை நான் தாக்கியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறுவது நியாயமற்றது. அவர் ஒரு பகுதி நேர உதவியாளராகவும், வார இறுதி நாட்களில்...
பார்வதி நாயர் இஸ் எ டோஸ்ட்மாஸ்டர்

பார்வதி நாயர் இஸ் எ டோஸ்ட்மாஸ்டர்

சமூகம்
உலக அளவில் இலாப நோக்கமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான டோஸ்ட்மாஸ்டர், 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு இயங்கும் இந்த 'டோஸ்ட்மாஸ்டர்' தன்னார்வ தொண்டு நிறுவனம், கல்வியியல் துறையில் ஆக்கபூர்வமாக செயல்படும் தலைவர்களையும், தலைமைப் பண்புடன் கூடிய பேச்சாளர்களையும், மனதின் மாசுகளை அகற்றி, வலிமையான உளவியல் உத்திகளுடன் முன்னேற்றத்தை நோக்கி செல்வதற்கான பாணியை எளிதாக விளக்கும் சுயமுன்னேற்ற பேச்சாளர்களையும் உருவாக்கியிருக்கிறது. இவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள கௌரவ விருந்தினராக அழைக்கப்படுவதற்கே ஏராளமான தகுதிகள் வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் அனுபவ ஆளுமையுடன் சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கும் திறமையாளர்களையும், சாதனையாளர்களும் மட்டும்தான் இவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு கௌரவ விருந்தினர்களாக அல்லது பேச்சாளர்களாகவும் அழைக்கப்படுவர். உதாரணமாக்க் ...