Shadow

Tag: பிக் பாஸ் மீரா மிதுன்

பிக் பாஸ் 3: நாள் 35 – நான் கேட்டேனா முருகேஷா?

பிக் பாஸ் 3: நாள் 35 – நான் கேட்டேனா முருகேஷா?

பிக் பாஸ்
சாண்டி மீராவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மீரா, மீரா மாதிரியே பேசிக் கொண்டிருந்தார். அப்படியே கட் பண்ணினால் கமல் சார் என்ட்ரி. இந்த சீசனில் கமலின் காஸ்ட்யூம் டிசைன் பட்டாசாக இருக்கு. உண்மை வெளிவருமென மீரா சொன்னதை சமகால நிகழ்வுகளோடு கனெக்ட் பண்ணிப் பேசி, அதற்கு கைதட்டல் கிடைத்த உடனே, ‘அய்யய்யோ நான் இங்க வீட்டுக்குள்ள நடக்கறதை சொன்னேங்க’ என ஆக்டிங் கொடுத்தார். ரகசிய அறையைப் பற்றிச் சொல்லி, ‘வேணுமா?’ எனக் கேட்டு, ‘உங்களை எல்லாம் திருத்தவே முடியாது’ என நேராக அகத்திற்குள் போனார். போன வேகத்தில் எலிமினேஷன் பற்றித்தான் பேசத் தொடங்கினார். கமலைப் பற்றி சில விஷயங்கள் சொல்லவேண்டும். எந்த சீசனிலும் இல்லாத அளவுக்குப் படு உற்சாகமாக இருக்கார். ஹவுஸ்மேட்ஸ் எல்லோரையும் பாகுபாடு இல்லாமல் கலாய்க்கிறார். ஒவ்வொரு வாரமும் அடுத்ததடுத்த டாபிக் போகும் போதும், முன்ன பேசினதுக்கும், அடுத்து பேசப்போறதுக்கும்...
பிக் பாஸ் 3: நாள் 34 – கமலைத் திகைக்க வைத்த மீரா

பிக் பாஸ் 3: நாள் 34 – கமலைத் திகைக்க வைத்த மீரா

பிக் பாஸ்
நேரடியாக கமலின் நுழைவில் இருந்து தொடங்கியது. வீட்டுக்குள் ஒரு மறைவான இடத்தில் இருந்து பேசிக் கொண்டிஇருந்தார். இந்த சீசனோட ரகசிய அறையைக் காண்பித்து விளக்கிக் கொண்டிருந்தார். யாருக்கு உபயோகப்படப் போகிறதெனத் தெரியவில்லை. அதற்கப்புறம் இந்த வாரத்தை பற்றிய வர்ணனைகள் அவரது பாணியில் செய்தார் கமல். வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம். போன வியாழன் இரவில் இருந்தே ஆரம்பித்தது. ‘தன்னோட மேக்கப் கிட்டைத் திருடிட்டாங்க, எல்லார் பொருளும் திரும்பி வந்துருச்சு, ஆனா என்னோடது மட்டும் வரல, இதுக்குக் காரணம் சாக்ஷி தான்’ என கவினிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மீரா. பெண்களுக்கு ஒன்றெனில் துடித்துப் போவதில் கவினுக்கு இணையாக யார் இருக்கிறார்கள்? உடனே சாக்ஷியிடம் போய் இதைப் பற்றிக் கேட்கிறான். சாக்ஷி எதுவும் திருடியது போல் நமக்குக் காட்டப்படவில்லை. அதுவும் இல்லாமல், மாட்டிக்காமல் திருடும் அளவுக்கு சாக்ஷிக்கு மூளை ...
பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்

பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்

பிக் பாஸ்
'வண்டியிலே நெல்லு வரும்' பாட்டோட ஆரம்பித்தது நாள். இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக பெர்ஃபாமன்ஸ் செய்தவர்கள், செய்யாதவர்களைச் சொல்லும்படி பிக் பாஸ் அறிவித்தார். பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ்க்கு தர்ஷன் பேரும், மீரா பேரும் வந்தது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அவர்களே செலக்ட் ஆனார்கள். வாரம் முழுவதும் பெஸ்ட் பெர்ஃபாமர் பிரிவுக்கு முகினும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொடுத்த வேலையைச் சுவாரசியமாகச் செய்யாதவர்கள் பெயர் தேர்வு வரும்போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. அபிராமியும், லோஸ்லியாவும் இரண்டு நாட்களாக அனைவரையும் தங்கள் பெயரைச் சொல்வதற்கு கேன்வாஸ் செய்திருக்கிறார்கள். லியா கவினிடம் கேட்ட போது கண்டிப்பாக முடியாது எனச் சொல்லிவிட்டார். லியா, அபி இரண்டு பேரும் அவங்க என்னென்ன தப்பு செய்தார்கள் என லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டாலும், கவின் அதை ஒத்துக் கொள்ளவ...
பிக் பாஸ் 3 – நாள் 32

பிக் பாஸ் 3 – நாள் 32

பிக் பாஸ்
அதே கக்கூஸ், அதே கவின், அதே லியா, அதே கடலை, அதே நான், அதே நீங்க. ஏய் யப்பா, முடியலைய்யா கவினு. இடத்தையாவது மாத்தலாம். நாட்டாமைக்கு மரியாதை தருவதைப் பற்றி பிக் பாஸ் கிளாஸ் எடுத்திருப்பார் போல. டாஸ்க் ஆரம்பித்த உடனே, ஒரிஜினல் நாட்டாமை பாட்டு பாடி சேரனைக் கூட்டிட்டு வந்தார். இப்படியே மொக்கையாகவே போய்க் கொண்டிருக்கே என்று யோசித்த 'டைரக்டர்' சரவணன், ‘நான் ஒரு உண்மையைச் சொல்லப்போறேன்’ என சாண்டி, கவினை அழைத்து ஒரு கதை சொல்றார். கதைப்படி பாம்புபட்டி நாட்டாமை சேரனும், கீரிப்பட்டி நாட்டாமி மதுவும் கணவன்-மனைவி. தன் மனைவி தன்னை மாதிரியே நாட்டாமையாக ஆக வேண்டுமென ஆசைப்பட்ட போது, அதைத் தடுக்கிறதானால் இரண்டு பேரும் பிரிஞ்சுடறாங்க. அவங்களோட குழந்தை தான் லியா. இது எப்படி இருக்கு? இதை வைத்து ஒரு ட்ராமா செய்யலாமென சேரனிடமும், மதுவிடமும் இதைச் சொல்லி, லிவிங் ஏரியால எல்லாரும் கூடி இருக்கும் போது இந்த உண்மைய...