
“இரத்தக்களறி இல்லாத சசிகுமார் படம்” – புஷ்கர் காயத்ரி | Tourist Family
நடிகர் சசிகுமார் - சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வெகு கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில் படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி, “அன்பின் வழியது உயிர்நிலை அப்படின்றது ஒரு முக்கியமான ஒரு குறளாக நான் பார்க்கிறேன். அதையே கவிஞர் வைரமுத்து ‘அன்பே சிவம்’ல, ‘அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!’ அப்படின்றாரு. அதுக்கும் கொஞ்சம் முன்னாடி போனால், அவரே அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயசு 100 ன்னு சொல்றாரு. அவ்வளவு அன்பு...














